விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் நேரிடையாக எந்தவிதமான ஆயுதங்களையும் வழங்காவிட்டாலும், இலங்கையின் வெற்றிக்கு இந்தியா மறைமுகமாக உதவியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன ஒரு புத்தகம்.
என்டிடிவி பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆசிரியர் கோகலே இலங்கையில் 33 மாதங்களாக நடைபெற்ற போரினை தொகுத்து சண்டை.முதல் சமாதானம் வரை என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு ஆயுத உதவிகள் கிடையாது என இந்தியா திரும்பத் திரும்பக் கூறினாலும், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை வெற்றிபெற இந்தியா மிகப்பெரிய அளவில் மறைமுகமாக உதவியது. முக்கியமாக இந்திய கடற்படையின் மிகப்பெரிய உதவியால்தான் விடுதலைப்புலிகளை வெற்றிகொள்ள முடிந்ததாக அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் கட்சிகளின் நெருக்குதல் காரணமாக மன்மோகன் சிங் அரசு வெளிப்படையாக உதவிகள் செய்யாவிட்டாலும் மறைமுகமாக அனைத்து உதவிகளையும் செய்ததாக கோகலே கூறியுள்ளார்.
இந்தியா மறைமுகமாக உதவிகளைப் பெருமளவில் செய்ததும், சீனா, பாகிஸ்தான் நாடுகள் வெளிப்படையாக ஆயுதங்களை அளி்த்ததும்தான் புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணம் என கோகலே தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.
மேலும் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசுக்கு இந்தியா என்னென்ன உதவிகளைச் செய்தது என்ற விவரங்களை கோகலே தனது புத்தகத்தில் விரிவாகப் பட்டியலிட்டுள்ளார்.
0 Responses to சண்டை முதல் சமாதானம் வரை