Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புலத்தில் பெண் துரோகி!

பதிந்தவர்: தம்பியன் 14 August 2009

பிரித்தானியாவில் அனைத்துப் போராட்டங்களிலும் பங்குபற்றி, சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராகப் போர்கொடி தூக்கியாடிய நாட்டியத் தாரகை அங்கையற்கன்னி அம்மையார் தற்போது டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து சிறிலங்கா அரசுக்கு ஆதரவாகச் செயல்படத் தொடங்கியுள்ளார்ந்து.

புலம்பெயர் லண்டன் வாழ் தமிழர்களில் ‘நாட்டியப் பேரரசி’ அங்கயற்கண்ணி செல்வராசாவைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு எமது ஈழத் தமிழர்களுக்காக கடைசி வரை நடாத்திய போராட்டங்களில் முதல்வரிசைப் பெண்மணியாகப் பங்களித்து, ஈழவிடுதலை மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பல செயற்பாடுகளில் ஈடுபட்டவர் தான் இந்த வேஷதாரி அங்கயற்கண்ணி.

எமது போராட்டங்கள் பற்றி வெள்ளைக்காரப் பெண்மணிகளுக்கும் கூட விளக்கம் கொடுத்துள்ளார். இவரைப்போலத் தான் இருக்க வேண்டும் நமது பெண்மணிகள் எனப் பாராட்டப்பட்டவர் இவர்.

புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் இறப்புக்கு தனது அதிர்ச்சியையும் ஆதங்கத்தையும் லண்டன் தமிழ் ஊடகம் மூலம் வெளிப்படுத்தியவர்.

ஆனால் இப்போது, யாழ்ப்பாணத்தில் அரச படைகளுடன் உள்ள ஒட்டுக்குழுக்களில் ஒன்றான ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இவரும் கூட்டுச் சேர்ந்துள்ளார். யாழ் மாநகரசபைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஈ.பி.டி.பி யின் முதல்வரிசைப் பெண்மணி இவர்தான்.

இறுதி வரைக்கும் லண்டன் புலம்பெயர் வாழ் மக்களுடன் நின்ற இவர் யாழ்ப்பாணம் வந்த உடன், டக்ளஸுடன் சேர்வது சாத்தியமான ஒன்றா?

இங்கு தான் நாம் சற்றுச் சிந்திக்கவேண்டியுள்ளது. அப்படியெனில், பல வருடங்களாக அல்லது குறைந்தபட்சம் ஒரு வருடமாவது அந்த ஒட்டுக்குழுவுடன் இவருக்கு தொடர்பு இருந்திருக்கவேண்டும், பரஸ்பர பேச்சுக்கள் நடந்திருந்தால் மட்டுமே யாழ்ப்பாணம் வந்ததும் இவர் டக்ளசைச் சந்தித்திருக்க முடியும். சந்திக்கும் அனைவருக்கும் டக்ளஸ் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றில்லை. இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது எனில்… லண்டனில் இருந்தபடி ஏதோ உளவு பார்த்திருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இவ்வாறான நம்பிக்கைத் துரோகிகளே எமது சுதந்திரப் போராட்டங்களின் முக்கிய தடைக்கற்கள். ஈழப் போராட்டத்தில் நம்பிக்கைத் துரோகம் என்பது புதிய விடயமல்ல. களத்தில் நின்றவர்களில் கருணாவுடன் முடிந்துவிட்டதாகக் கருதப்பட்ட இந்த நம்பிக்கைத் துரோகம், புலம்பெயர் வாழ் தமிழர்களிடையேயும் ஊடுருவி இருப்பதென்பதை ஜீரணிக்கமுடியவில்லை. இதேபோன்ற துரோகிகள் தான் கே.பி விடயத்திலும் இருந்தார்களோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இது ஒரு புறம் இருக்க, தற்போதைய நிலையில் எமது போராட்டம் முற்று முழுதாக புலம் பெயர் வாழ் மக்கள் கைகளுக்கு மாறியிருக்கிறது. இந்தப் போராட்டமும் ஸ்தம்பிக்கும் முன்னர், இவர்கள் போன்றோரை முதலில் களைஎடுப்பது நல்லது. தூரோகிகளை முதலில் அடையாளம் கண்டு அகற்றுவதன் மூலமே நாம் எமது போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்த முடியும்.

0 Responses to புலத்தில் பெண் துரோகி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com