ஈழத்தமிழர்களை பாதுகாக்க மத்தியஅரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் ரெயில் மறியல் செய்ய முயன்ற 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழர்கள் போதிய உணவு, உடை, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி துன்பமடைந்துவரும் நிலையில் அவர்களை பாதுகாக்கவும் மீள் குடியேற்றம் செய்யவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியறுத்தி இன்று காலை தி.க.வினர் ரெயில் மறியல் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.
இதற்கு காவல்துறையினர் தடை விதித்திருந்தனர். ஆனால் தடையை மீறி சென்னை பெரியார் திடலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு எழும்பூர் ரெயில் நிலையம் நோக்கி சென்ற திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீ உள்ளிட்ட தி.க.வினர் சுமார் 1000 பேரை வேப்பேரி காவல்துறையினர் தடுத்து கைது செய்தனர்.
நன்றி: தெனாலி.
தடையை மீறி ரெயில் மறியல் செய்ய முயன்ற தி.க.வினர் 1000 பேர் கைது!
பதிந்தவர்:
தம்பியன்
02 September 2009
0 Responses to தடையை மீறி ரெயில் மறியல் செய்ய முயன்ற தி.க.வினர் 1000 பேர் கைது!