Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆசிய பிராந்திய கப்பல் உரிமையாளர் சங்கமானது தற்போது சிங்கப்பூரில் இயங்கிவருகிறது. ஆனால் ஆசிய பிராந்திய கப்பல் போக்குவ்ரத்து மற்றும் வர்த்தகத் துறைகளை மேம்படுத்தும் நோக்கில் அச்சங்கத்தை இலங்கையில் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது சம்பந்தமான மகஜரொன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் சங்கத்தால் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதில் துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆசிய பிராந்திய கப்பல் உரிமையாளர் சங்கத்தை இலங்கையில் அமைக்க வேண்டுதல் விடும் அம்மகஜரை ஜனாதிபதியிடம் கையளித்தார். இது சம்பந்தமாக ஜனாதிபதி செயலக அறிக்கையில், இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு அமைதிச் சூழல் நிலவுவதாகவும், எனவே இதுவரை சிங்கப்பூரில் இயங்கிவந்த மேற்படி சங்கத்தை இலங்கையில் அமைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக இலங்கையானது தனது சர்வதேச தொடர்புகளை மேம்படுத்திக் கொள்ளவும் கப்பல் போக்குவரத்து மற்றும் வியாபாரத்தை மேலும் முன்னேற்றுவதற்கும் தீர்மானித்துள்ளதாம். இந்நிகழ்வில் அமைச்சர் சமல் ராஜபக்ஷவுடன் விமான நிலையத் தலைவர் பிரசன்ன விக்ரமசூரிய, ஆசிய கப்பல் உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரொஹான் வாசகோரால ஆகியோரும் பங்குபற்றியுள்ளனர்.

நன்றி: சங்கமம்

0 Responses to இலங்கையில் ஆசிய பிராந்திய கப்பல் உரிமையாளர் சங்கத்தை அமைக்க திட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com