
பிரான்சு தலைநகர் பாரிசில் அமைந்துள்ள பிரான்சின் நாடாளுமன்றம் முன்பாக கவனயீர்ப்பு ஒன்றுகூடல் கடந்த புதன்கிழமை (16.09.2009) மாலை 15.00மணிக்கு தொடர்ந்து இரண்டாவது கிழமையாக நடைபெற்றது.
தமிழ் மக்களை இனப்படுகொலை செய்து தற்போது வதை முகாம்களில் அடைத்து வைத்து சித்திரவதைகள் செய்து கொண்டிருக்கும் சிறிலங்கா அரசின் தமிழின வதையையும் மனிதவுரிமை மீறலையும் கண்டித்து கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெற்றது.
வதைமுகாம்களுக்குள் அடிப்படைத்தேவைகள் மறுக்கப்பட்டவர்களாக அடைத்து வைத்துள்ள மக்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும் பாதிப்படைந்து வாழும் மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் கிடைக்கச்செய்யவும் வலியுறுத்தப்பட்ட இப்போராட்டம் தமிழ் மக்களுக்கான அரசியல் அபிலாசைகளையும் வலியுறுத்தி முன்னெடுகக்கப்பட்டது.
தமிழ் மக்களை படுகொலை செய்து வரும் சிறிலங்கா அரசிற்கெதிரான பதாகைகள் தாங்கப்பட்தோடு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது. இன்று தமிழ் மக்களுக்கான ஆதரவுக்குரல்கள் பலமாக எழுப்பப்பட்டுக்கெண்டிருக்கும் இவ்வேளை அனைத்து புலம்பெயர் மக்களும் வேகத்தோடு போராடவேண்டும்.
பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற கண்டன ஒன்றுகூடலானது தொடர்ந்து பிரான்சின் நாடாளுமன்றம் முன்பாக ஒவ்வொரு புதன்கிழமையும் மாலை 15.00மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து மக்களும் இனிவரும் போராட்டங்களில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
நன்றி: சங்கதி
பிரான்சின் நாடாளுமன்றம் முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்பு ஒன்றுகூடல்
பதிந்தவர்:
தம்பியன்
18 September 2009



0 Responses to பிரான்சின் நாடாளுமன்றம் முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்பு ஒன்றுகூடல்