முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை கைதியாக இருப்பவர் நளினி. இவர் வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் சிறையில் வகுப்பு கேட்டு “தடா” கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
’’சிறையில் எனக்கு 1998-ம் ஆண்டுவரை முதல் வகுப்பு வழங்கப்பட்டது. ராஜீவ் கொலையில் தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு முதல் வகுப்பு தரவில்லை.
நான் சிறையில் எம்.ஏ., எம்.சி.ஏ., போன்ற பட்டமேற் படிப்புகள் முடித்துள்ளேன். எனவே எனக்கு முதல் வகுப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இம்மனு தடா கோர்ட்டு நீதிபதி ராமலிங்கம் முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது. மனு மீதான இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை தொடர்ந்து தீர்ப்பை நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.
0 Responses to எனக்கு முதல் வகுப்பு வேண்டும் நளினி வழக்கு