தமிழ் ஈழப் போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டால் அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதிக் கட்ட போரின்போது தனது தளபதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அருட்தந்தை ஜெகத்கஸ்பர் நக்கீரனில் எழுதிய கட்டுரையிலிருந்து…
போராட்டம் என்னவாகும்? தமிழருக்கு அரசியல் தீர்வொன்று கிட்டுமா? எதிர்காலம் எவ்வாறிருக்கும்? பலரும் கேட்கிற கேள்விகள் இவை.
இதோ பதில்:
மே-04. முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இறுதி யுத்தத்தின் உக்கிரம் ஏறிக் கொண்டிருந்த நாட்கள். இயக்கத்தின் இரண்டாம் நிலை எதிர்காலத் தலைவர்களை அழைத்திருக்கிறார் வேலுப்பிள்ளை பிரபாகரன். இரவுப் பொழுது.
பங்கருக்குள் சந்திப்பு. அவரது கண்களில் ஞானத்தீட்சை பெற்றவர் போன்றதொரு ஒளி. ஒவ்வொரு சொல்லிலும் நம்பிக்கையின் உயிர்த் துடிப்பு. பிரபாகரன் பேசி யிருக்கிறார்:
“தினையான் குருவியை பார்த்திருக்கிறீர்களா? வேலிகளில், பூச்செடிகளில், வயல்வெளிகளில், வாலை வினாடிக்கு இருமுறை சிலிர்ப்பிக் கொண்டு தினைகள் சேகரிக்குமே தினையான் குருவி… குருவி இனங்களிலேயே மிகச் சிறிய குருவி இந்த தினையான் குருவிதான்… ஆனால் வெயில், மழை, புயல், குளிர், பாம்பு-எலி போன்ற எதிரிகள் எல்லாவற்றிடமிருந்தும் தன்னை பாதுகாத்துக் கொள்கிற ஏற்பாடுகளை சிறுகச் சிறுக ஆனால் கச்சிதமாகவும், பிசிரின்றியும், தன்னம்பிக்கையோடும் செய்யும்.
நீங்களும் தினையான் குருவிகளைப் போல் இருங்கள். போராட்டம் இன்று மிகவும் பின்னடைவு கண்டிருப்பது உண்மைதான். ஆனால் தினையான் குருவிகளைப் போல எமது போராட்டத்தையும், எமது மக்களுக்கான வாழ்வையும் மீண்டும் கட்டியெழுப்புவோம்.
எதற்கும் அஞ்சாதீர்கள். நாம் எண்ணிக்கையில் மிகச் சிறியவர்களாக இருந்தபோதும் நமது தளராத மன உறுதிதான் நமது போராட்டத்தை பெரிதாக வளர்த்தது. பாரதியாரின் பாடலை எப்போதும் நினைவில் கொண்டிருங்கள்.
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை
வைத்தேன்
வெந்து தணிந்தது காடு: -தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும்
உண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்…”
இரண்டு முறை இப்பாடலை பாடிய பிரபாகரன் அவர்கள் தொடர்ந்திருக்கிறார்.
“பாரதியின் அக்னிக் குஞ்சுகள் போலும் இருங்கள். நமது வளங்கள் அழிந்து குறுகி விட்டோமே என்று மனம் தளராதீர்கள். முக்கியமாக அஞ்சாதீர்கள். நம்பிக்கையை இழக்காதீர்கள். கொடூரத்தின் உச்சத்தில் நின்று கோரத்தாண்டவம் புரியும் சிங்களப் பேரினவாதக் காட்டை அழிக்க பொந்திடை வைக்கும் சிறு நெருப்பு போதும். ஏனென்றால் உண்மையும், நீதியும், வரலாறும் என் றானாலும் நமது பக்கமாய்த்தான் இருக்க முடியும். எனவே அஞ்சாதீர்கள்.
போராட்டத்தின் அக்னிக் குஞ்சுகள் நீங்கள். சிறு நெருப்பாய் இருங்கள். உங்களிலிருந்து பெரு நெருப்பு உருவாகும்…”, என்றாராம்.
நன்றி: நக்கீரன்
வணக்கம் தமிழ்செய்திகள் இணையம் தொடர்ந்து செயல் பட உதவுங்கள்
கடந்த ஒரு வருடங்களாக செயல் பட்டு வந்த தமிழ்செய்திகள் இணையம் இன்று எமது சில செய்தியாளர்களின் தனிபட்ட கருத்து வேறுபடுகள் காரணமாக இன்று ஒரு சில செய்தியாளர்களை இழந்து நிற்கின்றது.
ஆரம்பிக்கும் போது ஒரு சில வாசகர்களை கொண்ட இந்த தளம் இன்று பல வாசகர்களை கொண்ட ஒரு தளமாக மாற்றம் பெற்றுள்ளது.இது சில செய்தியாளர்களுக்கு பிடிக்கவில்லை ஆரம்பத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றாக செய்யல்படுவோம் என சொன்னவர்கள் எல்லாம் இப்பொது அவர்களுக்கு என தளம் அமைத்து கொள்ள தொடக்கி இருப்பது அவர்களின் பொறாமை தன்மையை காட்டுகின்றது.
ஆகவே நீங்களும் எங்கள் செய்தியாளர் ஆகவும்
நீங்கள் பிற செய்திதளங்களில் (tamilwin,pathivu,sankathi) படிக்கும் செய்திகளை copy செய்து உங்கள் மின்அஞ்சல் மூலம் எங்களுக்கு கீழ் உள்ள மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.நீங்கள் அனுப்பும் செய்தி அல்லது கட்டுரைக்கு தொடர்பான படத்தையும் இணைத்து அனுப்பி வைக்கவும்.
அனுப்பவேண்டிய முகவரி : usertamil.fortamilseithekal@blogger.com
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!
அன்புடன் தமிழ்செய்திகள் team