தமிழ் நாட்டின் முன்னனி நடிகரான விஜய்க்கு அரசியலில் இறங்கும் ஆர்வம் வந்துள்ளது. அதனை நாம் வாழ்த்தி வரவேற்கிறோம். ஏனெனில் விஜயை நாம் எங்களில் ஒருவராகவே இதுவரை கருதி வருகிறோம்.
ஆனால் இன்று ஒரு செய்தி வெளிவந்துள்ளது விஜய் அவர்கள் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் அமைப்பின் இளைஞரணித் தலைவரும், சோனியாவின் மகனுமான ராகுல் காந்தியுடன் நடிகர் விஜய் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தமிழர்கள் அனைவரின் மனதையும் மிகவும் வேதனைப் படுத்தியுள்ளது இச்செய்தி உண்மையானால் விஜய் தனது தமிழ் உணர்வுள்ள தன்மானமுள்ள ரசிகர்கள் அனைவரையும் இழக்க வேண்டியேற்படும்.
இதுவரை விஜய் அவர்களை தங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்துப் போற்றியவர்களாலேயே தூற்றப்படுவார்.
"தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் தூற்றப்படக்கூடாது தமிழர்களுக்கு எதிரானவர்கள் போற்றப்படக்கூடாது"
விஜய் எந்தப் பட்டியலில் இணையப் போகிறார் பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் ரசிகர்களா? தமிழர் விரோத காங்கிரசா? விஜய் அவர்களே முடிவு உங்களின் கையில்.
நன்றி: பிரியா.
தமிழ் ரசிகர்களா? தமிழர் விரோத காங்கிரசா? முடிவு விஜயின் கையில்
பதிந்தவர்:
தம்பியன்
02 September 2009
0 Responses to தமிழ் ரசிகர்களா? தமிழர் விரோத காங்கிரசா? முடிவு விஜயின் கையில்