Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஏ9 பாதையூடாகப் போக்குவரத்து செய்வதற்காக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் பாரவூர்திகளுக்கு வழங்கிய அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏ9 பாதையூடாகப் போக்குவரத்து செய்வதற்கு 854 பாரவூர்திகளுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட போதிலும் அவற்றை போக்குவரத்து நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டு இரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் ஏ9 வீதி திறக்கப்பட்ட பின்னர் ஒரு தடவை போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு பாரவூர்தி உரிமையாளர்கள், ஒரு இலட்சம் ரூபாவை கட்டணமாகக் கோருகின்றனர் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால், இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் சிறீலங்கா அரசின் சில அரசியல்வாதிகள் மற்றும் செல்வாக்கு மிக்க சிங்கள மற்றும் முஸ்லீம் வர்த்தகர்களின் பார ஊர்திகள் பல வரும் நாட்களில் யாழுக்கு பொருட்களை எடுத்து செல்ல விண்ணப்பித்து இருப்பதால் அவற்றிற்கு சந்தர்ப்பம் வழங்கும் பொருட்டு தமிழ் வர்த்தகர்களின் பாரஊர்திகளின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறியவருகின்றது.

நன்றி: சங்கதி

0 Responses to தமிழ் வர்த்தகர்களின் பாரஊர்திகளின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com