தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன், ஜெனீவாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிறீலங்காவின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளார்.
தடப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் தற்போதைய நிலைமைகள், மற்றும் அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் துணை பேச்சாளர் மரியா ஒகாபே தெரிவித்துள்ளார்.
தடுப்பு முகாம்களில் உள்ள மக்கள் விடுவிக்கப்பட வேண்டியமை மற்றும் முகாம்களுக்குள் தொண்டு பணியாளர்களுக்கும், பொது மக்களுக்குமான நடமாட்ட சுதந்திரம் போன்ற விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தடப்பு முகாம்களில் இன்னமும் 3 இலட்சம் பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்துக் கவலையடைவதாகவும், முகாம் நடவடிக்கைகள் அபிவிருத்தி செய்யப்படாத நிலையில், எதிர்வரும் பருவப்பெயர்ச்சி மழை காலத்தில் முகம் கொடுக்க வேண்டிய சவால்கள் பற்றித் தாம் அச்சமடைவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முகாமில் உள்ளவர்களை விரைவில் விடுவிக்கப்பட்டு, பிளவுபட்ட குடும்பங்கள் ஒன்றிணைக்கப்பட்டு சுதந்திரமாக வாழ்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என மேலும் கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்
பிளவுபட்ட குடும்பங்கள் ஒன்றிணைக்கப்பட்டு சுதந்திரமாக வாழ்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்: பான் கீ மூன்
பதிந்தவர்:
தம்பியன்
04 September 2009
0 Responses to பிளவுபட்ட குடும்பங்கள் ஒன்றிணைக்கப்பட்டு சுதந்திரமாக வாழ்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்: பான் கீ மூன்