Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசியலை அரசியலால் வீழ்த்துவேன் சீமான்

பதிந்தவர்: தம்பியன் 23 September 2009

நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் அவ்வியக்கத்தின் சார்பாக புதுக்கோட்டையில் 20.9.2009 அன்று கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.

இக்கூட்டத்தில் நாம் தமிழர் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறப்போகிறது என்று தெரிவித்தார். மேலும் யாருடனும் கூட்டணி கிடையாது என்று அதிரடியாய் அறிவித்தார்.

சீமான் உரை முழுத்தொகுப்பு:

’’அறுபது ஆண்டுகளாக எமது போராட்டம் மக்களுக்கு தெரியாமல் இருந்தது. ராஜீவ்காந்தி மரணத்திற்கு பிறகுதான் அது தெரியவந்தது.

ஆனாலும் ராஜீவ் மரணத்தால் இந்த போராட்டத்தை வேறு கோணத்தில் பார்த்தார்கள். ஒரு இனத்தின் அழைவையே மறைத்துவிட்டார்கள்.

அந்த உண்மைகளைத்தான் நாங்கள் வெளிக்கொண்டு வந்தோம். தமிழர்கள் பூர்வகுடி என்பது இப்போராட்டங்களின் மூலம் இபோது தெரிய வந்திருக்கிறது.

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை என்பதைக்கூட நாலு சுவற்றுக்குள் இருந்துகொண்டுதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

காந்தியை கோட்சே சுட்டுக்கொன்றபோது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு தடை விதித்தார்கள். ஆனால் அந்த இயக்கத்தை ஆதரித்து பேச தடை விதிக்கவில்லை.

அந்த தடையையும் 16 மாதற்குள் நீக்கிவிட்டார்கள். 20 வருடங்களாக தமிழ் சாதிக்கு மட்டும் ஏன் தடை? இதற்காக குரல் கொடுத்தால் நமக்காகத்தான் கட்டப்பட்டிருக்கிறது சிறைச்சாலைகள்.

நாம் சிறையை நிரப்பினால்தான் சிறை பணியாளர்கள் வயிறை நிரப்ப முடியும்.

தமிழ் ஈழம் வேண்டுமா வேண்டாமா என்பதை வாக்கெடுப்பு நடத்தினால் தெரிந்துவிடும். ஆனால் இந்திய அரசாங்கம் அதை செய்யாது. ஏன் தெரியுமா?வாக்கெடுப்பு நடத்தினால் 61\2 கோடி தமிழர்களும் தனி ஈழம்தான் தீர்வு என்று சொல்வார்கள். அதனால் வாக்கெடுப்பு நடத்த மாட்டார்கள்.

ஆனாலும் நாம் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. தமிழுக்கு ஒரு தேசம் வேண்டும். அது இந்தியாவிலா?இலங்கையிலா? இந்திய அரசாங்கமே உடனே அறிவித்திடு.

இந்தியாவில் இறையாண்மை இருக்கிறது என்கிறார்கள். எங்கே இருக்கிறது சொல்லுங்கள். அரசு விழாக்களில் பிரதமர்,ஜனாதிபதி படங்கள் இருக்கலாம்.

அமைச்சர்கள் படம் இருக்கலாம். ஆனால் எந்த விதத்தில் அரசு விழாக்களில் சோனியாவின் படம் இருக்கிறது. இதை ஏன் காங்கிரஸ்காரர்கள் தட்டிக்கேட்கவில்லை.

அவர்கள் தட்டிக்கேட்கவும் முடியாது. இறையாண்மை இங்கே கேள்விக்குறிதான். காங்கிரஸ் கூட்டணியில் உள்ளவரகள் கூட இதை ஏன் எதிர்த்து கேட்கக்கூடாது.

தேசிய இனத்தின் அடக்குமுறைக்கு எதிரான விடுதலைப்போராட்டத்தைத்தான் பிரபாகரன் நடத்திவந்தார்.அதைத்தான் நாங்களும் செய்து வருகிறோம்.

இனி போராடி பலனில்லை என்று சில அமைப்புகள் கொஞ்சம் அமைதி காக்கின்றன. ஆனால் நாம் தமிழர் இயக்கம் அமைதியாக இருக்காது.

பொதுவாக நேற்று வரை நடந்து வந்த ஈழ போராட்டத்தில் இப்போது சிறிது இடைவெளி இருக்கு. இன்னும் நான்கு மாதங்கள் அல்லது நான்கு வருடங்களில் ஈழ போராட்டம் முன்பை விட பெரிய அளவில் வெடிக்கும்.

தனித்தமிழ் ஈழம் தான் தீர்வு;அந்த தீர்வை நோக்கி போராட்டம் தொடரும்.

நாம் தமிழர் இயக்கம் அரசியல் இயக்கமாக கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கில்தான் துவக்கப்பட்டது.

இந்த இயக்கத்தின் முதல் மாநாடு வரும் மே-17ல் நடைபெறவிருக்கிறது. அதற்கான கலந்தாய்வு கூட்டம் தான் மாவட்டம்தோறும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்த மாநாட்டில் 61/2 கோடி தமிழர்களில் 61/4 கோடி பேர் கலந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நான் கோவை விழாவில் பேசச்சென்றபோது போலீசார் என்னிடம் வந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தையும், பிரபாகரனையும் வாழ்த்திப்பேசக்கூடாது என்று கட்டளை இட்டார்கள். நானும் சரி என்று சொல்லிவிட்டு மேடை ஏறினேன்.

போலீசார் உத்தரவிட்டதை மீறவில்லை. நான் வாழ்த்திப்பேசவே இல்லை.

ஆனால் என்ன பேசினேன் தெரியுமா? பிரபாகரன் ஒழிக!விடுதலைப்புலிகள் இயக்கம் ஒழிக!! என்று அதிர முழக்கமிட்டேன். போலீசாரும் கூட்டத்தினரும் திகைத்துப்போனார்கள்.

ராஜபக்சேவையும், கருணாவையும், டக்ளஸ் தேவானாந்தாவையும் கொல்லாமல் விட்டுவிட்ட பிரபாகரனே ஒழிக! விடுதலைப்புலிகள் இயக்கமே ஒழிக!!என்று பின்பு முழக்கமிட்டதும் போலீசார் தலையில் அடித்துக்கொண்டு போனார்கள்

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை என்பதைக்கூட நாலு சுவற்றுக்குள் இருந்துகொண்டுதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

காந்தியை கோட்சே சுட்டுக்கொன்றபோது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு தடை விதித்தார்கள். ஆனால் அந்த இயக்கத்தை ஆதரித்து பேச தடை விதிக்கவில்லை.

அந்த தடையையும் 16 மாதற்குள் நீக்கிவிட்டார்கள். 20 வருடங்களாக தமிழ் சாதிக்கு மட்டும் ஏன் தடை? இதற்காக குரல் கொடுத்தால் நமக்காகத்தான் கட்டப்பட்டிருக்கிறது சிறைச்சாலைகள்.

நான் சிறையை நிரப்பினால்தான் சிறை பணியாளர்கள் வயிறை நிரப்ப முடியும்.

தமிழ் ஈழம் வேண்டுமா வேண்டாமா என்பதை வாக்கெடுப்பு நடத்தினால் தெரிந்துவிடும். ஆனால் இந்திய அரசாங்கம் அதை செய்யாது. ஏன் தெரியுமா?வாக்கெடுப்பு நடத்தினால் 61\2 கோடி தமிழர்களும் தனி ஈழம்தான் தீர்வு என்று சொல்வார்கள். அதனால் வாக்கெடுப்பு நடத்த மாட்டார்கள்.

ஆனாலும் நாம் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. தமிழுக்கு ஒரு தேசம் வேண்டும். அது இந்தியாவிலா?இலங்கையிலா? இந்திய அரசாங்கமே உடனே அறிவித்திடுஇளையான்குடியில் ஒரு முஸ்லீமை வைத்து என் மீது வழக்கு போட வைத்து என் தகுதியை அதிகப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

அடிக்கடி உணர்ச்சி வசப்படுகிறேன் என்கிறார்கள். எனக்கு உணர்ச்சி இருக்கிறது;வசப்படுகிறேன். பலருக்கு உணர்ச்சி இல்லை;வசப்படவில்லை.’’

0 Responses to அரசியலை அரசியலால் வீழ்த்துவேன் சீமான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com