Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் இந்தியா மீது, செப்டெம்பர் 11 வகை தாக்குதல் பாணியில், தாக்குதல் நடத்தக் கூடும் என்ற எச்சரிக்கையை இந்திய வெளியுறவுத் துறை சல்மான் குர்ஷித் மறுத்துள்ளார்.

இதுவரை இவ்வாறு நிகழக் கூடும் என்பதற்கு எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை. எனினும் எமது பாதுகாப்பு ஏஜென்ஸிக்கள் அனைத்துவகையிலான ஊகங்களையும் கருத்தில் எடுத்துள்ளன. மேலும் எமது தேடுதல் நடவடிக்கையை எவ்வகையிலும் இடைநிறுத்திக் கொள்ள மாட்டோம். எனினும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியதும், வழிநடத்த வேண்டியதும் மலேசிய அரசு தான்.

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் செயற்பாடு அனைத்தும்  இடைநிறுத்தப்பட்ட பின்னரும் விமான ஓட்டி விமானக் கட்டுப்பாட்டு நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பிலிருந்தது தற்போது தெரியவந்துள்ளது. எனவே விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற ரீதியில் தொடர்ந்து தேடுதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளார்.

0 Responses to காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் இந்தியா மீது செப்.11 உக்தியில் தாக்குதல் திட்டம்? : மறுக்கும் சல்மான் குர்ஷித்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com