Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் இயக்கத்தின் தலைவருமான சீமான் பல்லடம் வந்தார். அங்கு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கல்ந்துகொண்டு பேசினார்.

அப்போது, ‘’உலகில் உள்ள தமிழர்களுக்கு பிரச்சினை என்றால் யாரும்குரல் கொடுப்பதில்லை. தமிழனாக முன்வந்து குரல் கொடுப்பதில்லை. கட்சி தலைமையோ, ஜாதிசங்கமோ சொன்னால்தான் குரல் கொடுக்கிறார்கள். இதை பற்றி தமிழன் என்ற உணர்வோடு குரல் கொடுக்க முன்வர வேண்டும்.

நம்மிடம் ஓட்டு வாங்கி அரசியல் செய்யும் அரசியல் வாதிகள் அவர்களது அரசியலுக்கு மட்டும் தமிழர் பிரச்சினையை பயன் படுத்துகிறார்கள். தமிழன் என்ற உணர்வுகளோ, தொப்புள் கொடி சொந்தம் என்ற பாசத்துக்கோ எதுவும் செய்யவில்லை.

இந்த கூட்டம் கூட பொதுக்கூட்டமாக நடத்த அனுமதிக்கவில்லை. நான் என்ன தீவிரவாதியா? தமிழை பிற மொழிகலக்காமல் தமிழிலே பேசுங்கள். தமிழ் நாட்டில் தமிழனுக்கு முன்னுரிமை கொடுங்கள். இதை தமிழ்நாட்டில் தான் சொல்ல முடியும். அதற்கு அனுமதி கொடுங்கள்.

தெலுங்கு வருடப்பிறப்பு, ராஜசேகர ரெட்டி மறைவுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால் தமிழக வருட பிறப்புக்கு அங்கு விடுமுறை கொடுப்பதில்லை.

இலங்கை தமிழர்கள் முள்வேலிக்குள் அடைபட்டு கிடப்பது குறித்து பிரதமருக்கு அக்கறை இல்லை. தமிழக அரசியல்வாதிகள் யாரும் குரல் கொடுக்கவில்லை.

இதற்கெல்லாம் நாம் தமிழர் என்ற உணர்வு வேண்டும். ஜாதி, கட்சிகள் வேறுபாடுகளை மறந்து தமிழன் என்ற உணர்வோடு ஒன்று படுவோம். தமிழையும் தமிழர்களையும் காப்போம்’’என்று பேசினார்.

0 Responses to அரசியலுக்கு மட்டும் தமிழர் பிரச்சினையை பயன் படுத்துகிறார்கள்:சீமான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com