Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கோவையில் இந்து முன்னணி பிரமுகர், கோவையின் இந்து முன்னணி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் என்று சொல்லப்படும் சசிகுமார் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டதால் கோவை நகரத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

கோவையில் நிலவும் பதட்டமான சூழலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சசிக்குமாரை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், தேமுதிக, தமாக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசி, திக, தபெதிக, உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள் மாவட்ட ஆட்சியர் சந்திக்க உள்ளனர்.

கோவையில் இந்து முன்னனி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் பாஜகவினர் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 50பேர் கைது செய்யப்பட்டனர்.கோவையில் இதனால பதற்றம் நிலவி வருகிறது. போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

0 Responses to கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்டதால் பதற்றம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com