Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்காவிலிருந்து நான்கு படகுகளில் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட 142 பேரை சிறிலங்கா கடற்படையினர் நடுக்கடலில்வைத்து கைது செய்துள்ளதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது. நான்கு படகுகளில் சென்றுகொண்டிருந்த இவர்களை கடற்படையினரும் வான்படையினரும் சேர்ந்து பிடித்து கரைக்கு கொண்டுவந்துள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் தென்கிழக்கு கடலில் நான்கு படகுகளில் சென்று கொண்டிருந்தபோது, விமானப்படை ஹெலிக்கொப்டர்கள் இவர்களை அவதானித்து கரைக்கு தகவல் கொடுத்ததாகவும் நான்கு படகுகளை கலைத்துச்சென்ற கடற்படையினரின் படகுகள் அனைவரையும் படகுகளுடன் கைது செய்து கரைக்கு கொண்டுவந்ததாக கடற்படை பேச்சாளர் அத்துல செனரத் கூறியுள்ளார்.

படகிலிருந்தவர்கள் அனைவரும் பெருந்தொகையான பணத்தை கொடுத்து வெளிநாடு சென்றுகொண்டிருந்தவர்கள் என்றும் கடலில் சென்றுகொண்டிருந்த காரணத்தினால் அவர்களின் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதால் மருத்துவ உதவிகளுக்கு தற்போது ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரையும் படகுகளையும் கடற்படையினர் காலி மாவட்ட காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக அத்துல செனரத் கூறினார்.

இவர்கள் அனைவரும் சுமார் மூன்று வார கடல்யணத்தை மேற்கொண்டு ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்துக்குச்செல்வதுதான் திட்டமாக இருந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

0 Responses to ஆஸ்திரேலியா புறப்பட்ட 142 பேர் நடுக்கடலில் வைத்து சிறிலங்கா படையினரால் கைது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com