இம் மதிப்பளித்தல் நிகழ்வில் பொதுச்சுடரினை மாவீரர் சின்னவீரனின் தாயார் அவர்கள் ஏற்றிவைக்க அதனைத்தொடர்ந்து அமைதி வணக்க நிகழ்வும், மாவீரர்களின் நினைவாக ஈகைச்சுடர், மலர் வணக்கமும் இடம்பெற்றன.
மாவீரர்களின் மதிப்பளித்தல் பற்றியும், மாவீரர்களின் தியாகங்களும், தற்கொடைகள் பற்றியும், ஒவ்வொரு நாடுகளும் தமது நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்கு எவ்வாறான மதிப்பளித்தலை செய்கின்றதோ அதனையே நாமும் செய்கின்றோம் என்பதை தமிழ்ச்சங்களின் ஒருங்கமைபாளர் திரு. பாலசுந்தரம் அவர்கள் தனது ஆரம்ப உரையில் தெரிவித்திருந்தார்.
வெண்திரையில் மாவீரர் நினைவு பாடல்களும், மாவீரர் பற்றி ஆவணங்களும் ஒளிபரப்பாகின. 13.00 மணிக்கு மதிய உணவுடன் மாவீரர்களின் பெற்றோர்கள் மதிப்பளித்தல் நடைபெற்றன. மதிப்பளித்தலை மாவீரர்; பெற்றோராகிய சின்னவீரனின் தாயாரும், மாவீரன் மாதவனின் தந்தையும் செய்திருந்தனர்.
2009 தமிழீழ தேசியமாவீரர் நிர்வாக பிரான்சு கலைபண்பாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட்ட பேச்சுப்போட்டி, பாடல்போட்டிகளில், தனிநடிப்பு போட்டிகளில் கலந்து கொண்டு முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்றுக்கொண்ட நான்கு வயது முதல் 15 வயதிற்குட்டபட்ட குழந்கைளின் நிகழ்வுகள் நடைபெற்றன.
குழந்தைகள் மழலை தமிழாலும், கொஞ்சும் குரலாலும் பாடிய பாடல்கள் வந்திருந்தவர்களின் கண்களை குழமாக்யிருந்ததையும், மகிழ்சியான கரகோசத்தையும் காணக்கூடியதாக இருந்தது. பொருளும், புகழும் தேடும் இந்த பூவுலகில் எதையும் எதிர்பாராது காற்றிலும், கடலிலும், தரையிலும் தம்மை கரைத்து தாயகத்தின் விடுதலைக்காகவும், தன் சந்ததியின் நல்வாழ்வாழ்வுக்காகவும் தம்மை ஈந்தவர்கள் எம் தேசத்தின் மாவீரர்கள். இப்படிப்பட்ட புனிதர்களை பெற்றெடுத்த பெற்றோர்களையும், அவர்களின் உடன்பிறந்தவர்களையும் மதிப்பளித்து அவர்களுக்குரிய உயரிய இடத்தை கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனுடைய தலையாய கடமையாகும்.
நாட்டுக்காக உயிர்நீத்த மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளித்தல் என்னும் நிகழ்வானது காலம்காலமாக எமது மூதாதையரின் வழி முறையே தொன்று தொட்டு நிகழ்ந்து வரும் ஒரு உயரிய நிகழ்வாகும். என்ன நிலை எவருக்கு வந்தாலும் இந்த புனிதமான பணியை செய்ய வேண்டும்என்றும், எந்த இலட்சியத்திற்காக மாவீரர்கள் மண்ணில் மடிந்தார்களோ அந்த இலட்சியத்தை அடைய எந்த வழியை எம் வரலாறும், எம் மக்களும் தருகின்றார்களோ அந்த வழியில் சென்று நாம் அடைவோம் என்று உறுதியெடுத்துக்கொள்வோம் என்றும் எதிர்வரும் டிசெம்பர் மதாம் 12, 13 திகதிகளில் பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் கொடுக்கவிருக்கும் ஜனநாயக தேர்தல் அங்கீகாரம் மிகவும் முக்கியம் வாய்ந்ததொரு மைல்கல்லாகும் என்றும் நிகழ்வில் வந்திருந்த பெரியவர்களின் உரையுடன் தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்னும் உறுதியுரையுடன் மாலை 16.00 மதிப்பளித்தல் நிகழ்வு நிறைவு பெற்றது.





நன்றி: சங்கதி
0 Responses to பிரான்சில் மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளித்தல்