Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தனது தகப்பனாரின் அரசியல் வாழ்வையும் தனது அரசியல் எதிர்காலத்தையம் தனது இரண்டு மாமன்மாரும் சீரழித்துவருவதாக அரச தலைவர் மகிந்தவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச தனது இளையோர்களின் எதிர்காலம் என்ற அமைப்பின் அதிகாரிகளிடம் கூறி கவலையடைந்துள்ளார் என்று அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜே.வி.பியினரை அரசிலிருந்து விலக்கி விமல் வீரவங்ஸ தலைமையிலான குழுவினரை அரசுடன் இணைத்துக்கொண்டமைக்கு தனது ஒரு மாமனாரான பசில் ராஜபக்ச காரணம் என்றும் சரத் பொன்சேகாவுக்கும் தனது தகப்பனாருக்கும் பிரச்சினை வெடித்ததற்கு மற்றைய மாமனாரான கோத்தபாய காரணம் என்றும் -

இந்த இரண்டு செயற்பாடுகளுமே தனது தகப்பனாரை இன்று இவ்வளவு இக்கட்டான அரசியல் வங்குரோத்துநிலைக்கு கொண்டுவந்துவிட்டுள்ளது என்றும் - நாமல் ராஜபக்ச அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

தனது தகப்பனாரோ தாயாரோ அரச சொத்துக்கள் கையாளப்படும் விடயத்தில் சம்பந்தப்பட்டதே இல்லை என்றும் தனது இரண்டு மாமன்மார்கள்தான் சகல லஞ்ச, ஊழல் குற்றச்செயல்களுக்கு சூத்திரதாரிகள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஜே.வி.பியினருக்கும் தனது தகப்பனாருக்கும் இடையில் மீண்டும் எவ்வாறு நல்லுறவுகளை ஏற்படுத்தமுடியும் என்று தனது இளையோர் அமைப்பின் பிரதிநிதிகளிடம் ஆலோசனை கோரியுள்ள நாமல் ராஜபக்ச, எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் தனது தகப்பனாரின் வெற்றியை உறுதிப்படுத்தும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 Responses to தனது இரண்டு மாமன்களாலும் தகப்பனின் அரசியல் வாழ்வு சீரழிந்துள்ளதாக மகிந்தவின் மகன் கவலை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com