Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சட்டவிரோதமாக வெளிநாடுகளில் குடியேறிய சகல இலங்கையருக்கும் எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சட்டவிரோத குடியேற்றக்காரரால் நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படு வதோடு அது சட்டக் கட்டமைப்பை மீறும் செயலாக அமைகிறதென வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம குறிப்பிட்டார். கனடா, இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தற்போது உள்ள குடியேற்றவாசிகளில் அடையாளம் காணப்பட்டுள்ள இலங்கையர்களை வெளியேற்றுமாறு அந்தந்த நாடுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார். இவர்களை நாட்டுக்கு அழைத்துவர உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த நடவடிக்கையுடன் தொடர்புடைய புலிகள் இயக்க உறுப்பினர்கள் குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

0 Responses to வெளிநாடுகளில் சட்டவிரோதமாகக் குடியேறிய இலங்கையர்கள் மீது விரைவில் நடவடிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com