எதிர்க்கட்சிகளின் பொதுவான வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டால் பதவி விலக நேரிடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க உள்ளிட்ட சில கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்னர். ஜெனரல் பொன்சேகாவை பொதுவேட்பாளராக நியமிப்பதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகக்கூடும். இவ்வாறானதோர் பின்னணியில் தாம் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க நேரிடும் அல்லது அரசியலிலிருந்து ஓய்வு பெற நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இராணுவ ஆட்சியாளர்களால் ஆட்சி முன்னெடுக்கப்படும் நாடுகளில் எவ்வாறானதோர் நிலைமை காணப்படுகின்றது என்பதனை தனியாக விளக்க வேண்டிய அவசியமில்லை. மக்கள் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ வேண்டியது மிகவும் அவசியம். எனவே அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முனைப்புக்களில் தீவிரம் காட்டப்பட வேண்டும் என்றும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தலைமைத்துவம் நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமையக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரபல ஆங்கில வார இதழொன்றுக்கு எஸ்.பி.திஸாநாயக்கவின் நெருங்கிய நாடாளுமன்ற நண்பர் ஒருவர் இந்தத் தகவல்களை வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.



0 Responses to சரத் பொன்சேகா பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டால் பதவி விலக நேரிடும்