சிங்கள மொழியில் பேசி பொதுமக்களைப் பயன்முறுத்தும் பாணியில் பல வந்தமாக இவர்கள் நிதி சேகரித்து வரு வதாகத் தமக்கு தகவல்கள் கிடைத்துள் ளதாக படைத்தரப்பினர் கூறியுள்ளனர்.
குறிப்பாக யாழ். நகரை அண்டிய கரை யோரப் பகுதிகளில் கடந்த சில தினங்களில் விஷமிகள் தங்கள் கைவரிசையைக் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோசடி குறித்து மக்களை உஷாராக இருக்கும்படியும் இவ்வாறானவர்களின் நடமாட்டம் இருப்பின் தமக்குத் தக வல் தருமாறும்படையினர் கடந்த ஞாயிற்று இரவு குருநகர்ப் பகுதியில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்துள்ளனர்.
குருநகர்,பாஷையூர், கொழும்புத்துறை படை முகாம் பொறுப்பதிகாரிகள் மற்றும் யாழ். நகர படைத்தலைமையகத்துக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித் தால் உடன் நடவடிக்கை எடுக்கமுடியும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டது.



0 Responses to படையினருக்கு நிதி சேகரிப்பதாகக் கூறி குடாநாட்டில் விஷமிகள் கைவரிசை