Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவே எமது நெருங்கிய அயல்நாடு, பிராந்தியத்தில் வலுவான அயல்நாடு. இதன் காரணமாக இந்தியாவுடன் சிறப்பான உறவைப் பேணுவது அவசியம். சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் இணைந்து நான் செயற்பட்டேன் என எவராவது கூறுவார்கள் என்றால் அது இராணுவத் தளபாடங்களுக்காகத்தான். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு அவை தேவைப்பட்டன. இந்த இராணுவத் தளபாட ரீதியான உதவிகளை அந்த நாடுகள் வழங்கின. எனினும், யுத்தத்தில் வெல்வதற்குத் தார்மீக ரீதியாக, அரசியல் ரீதியாக உதவியது இந்தியாதான். இவ்வாறு நேற்றைய தினம் பத்திரிகையாளர்களை சந்தித்த சரத் பொன்சேகா கூறினார்.

கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் அவர் தெரிவிக்கையில் இந்தியாவுடனான உறவுகள் எப்போதும் உயர்மட்டத்தில் இருந்துள்ளன. எதிர்காலத்திலும் சிறந்த உறவுகளை இந்தியாவுடன் பேண விரும்புகிறேன்.எங்களுக்கு அருகிலிருக்கும் சிறந்த அயல்நாடு இந்தியா. இதன் காரணமாக சிறந்த உறவுகளைப் பேணவேண்டும். இராணுவத்தில் இணைந்த நான் முதல் நாள் அந்த நாட்டுடன் சிறந்த உறவுகளைப் பேணி வந்துள்ளேன். நான் இராணுவப் பயிற்சிக்காகத் தளபதியாக விளங்கியபோதும் நான்கு தடவைகள் இந்தியா சென்றுள்ளேன். அந்த நாட்டு இராணுவத்தைப் பெரிதும் மதிப்பதுடன் சிறந்த உறவுகளைக் கொண்டுள்ளேன் என்றார் அவர்.

தமிழர் பிரச்சினைக்கு 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வுகாண வேண்டியது அவசியம். ஆனால், பெரும்பான்மைச் சமூகத்தின் விருப்பத்திற்கு இணங்கவே இந்தச் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to போரின்போது மிகப்பெரியளவு உதவி செய்தது இந்தியாவே - சரத்பொன்சேகா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com