ஜனாதிபதித் தேர்தலின்பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவின் சுவரொட்டிகளை ஒட்டிய இருவரை கிளர்ச்சி ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டைப் பாதுகாக்கும் எஸ்.எவ். நடவடிக்கை ஆரம் பம் என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகள் நாடு முழுவ திலும் ஒட்டப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த ஜே.வி.பி கட்சியைச் சேர்ந்த இரண்டு ஆதரவாளர்களையே பொலி ஸார் கைது செய்துள்ளனர் எனவும், மொனராகலை பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. அரசுக்கு எதிரான வாசகம் எதுவும் சுவரொட்டியில் இல்லாததால் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஐ.எம். கருணரத்னா தெரிவித்தார்.
இதேவேளை, அரசிற்கு எதிரான வகையில் நாளைய தினம் ஜே.வி.பி கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்த உள்ளது என மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

0 Responses to பொன்சேகாவின் சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் பொலிஸாரால் கைது!