காலத்தால் அழியாத மாவீரரது நினைவுகளை நெஞ்சில் நிறுத்தி அனைத்து பாடசாலை மற்றும் பல்கலைக்களக மாணவர் மன்றங்களும் கனடா தமிழ் மாணவர் அமைப்புடன் இணைந்து இவ்நினைவெழுச்சி நிகழ்வினை நடாத்தவுள்ளன.
இந்நிகழ்வுக்கு தமிழின உணர்வாளரும் அன்றும், இன்றும், என்றும் ஈழத்தமிழருக்காய் குரல்கொடுத்துக்கொண்டிருக்கும் சீமான் அண்ணா அவர்கள் வருகை தந்து சிறப்பிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்ச்சியின் போது, மாணவர்களினால் தயாரிக்கப்பட்ட நடனங்கள், கவிதைகள், குறும் படங்கள், மாவீரர்களின் தியாகங்களைப் போற்றி பாடல்கள் மற்றும் மாணவர்களின் பேச்சுக்கள் போன்றவை மேடையேறவுள்ளன.
இந் நிகழ்ச்சி இணையத்தளங்கள் மூலம் இளையோரால் நேரடி அஞ்சல் செய்யப்படவிருக்கின்றது. மேற்கொண்டு நிகழ்ச்சிகளை காண கீழ் உள்ள இணையத்தளத்தினை நாடவும். www.canadatyo.org
0 Responses to சீமான் பங்கேற்கவுள்ள கனேடிய தமிழ் இளையோர் ஒன்றிணைந்து வழங்கும் மாவீரர் நாள் தொடக்க நிகழ்வு