Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் மாவீரர் நாள் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை யேர்மனி எசன் நகரில் நடைபெற்றது.

பொதுச்சுடரினை அருட்தந்தை இமானுவல் அடிகளார் ஏற்றிவைக்க தேசியக்கொடியினை மாவீரரின் சகோதரர் ஏற்றிவைத்தார்.

இதனை அடுத்து விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகத்தால் விடுக்கப்பட்ட மாவீரர் நாள் அறிக்கை திரையில் ஒளிபரப்பப்பட்டது.

இதனை அடுத்து பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லத்தில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. ஈகைச்சுடரினை பிரிகேடியர் தீபனின் சகோதரி திருமதி லோகநாதன் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து துயிலுமில்லப்பாடல் ஒலிக்கப்பட்டது.

இதனை அடுத்து மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்து மலர்கொண்டு மாவீரர்களுக்கு தமது அஞ்சலிகளைச் செலுத்தினர். மக்கள் மலர்அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்க இசை நிகழ்வு மேடையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இதனை அடுத்து கவியரங்கம் சிறப்புரை சிறப்புரையினை அருட்தந்தை இமானுவல் அடிகளார் நிகழ்த்தினார்.

மற்றும் தாயக மக்களின் அவலத்தை எடுத்துரைக்கும் நாட்டிய நாடகம் என்பன இடம்பெற்றன.

முள்ளிவாய்க்கால் மற்றும் காலம் தந்ததலைவா ஆகிய இறுவட்டுக்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன.

இந் நிகழ்வுகளின் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருந்தனர் தாயகவிடுதலைப் போராடத்திற்கான தமது பங்களிப்புக்கள் தொடரும் என்ற உறுதிமொழியுடன் மக்கள் அனைவரும் மண்டபத்தில் இருந்து கலைந்து சென்றனர்.

_DSC4623
_DSC4627
_DSC4645
_DSC4695
_DSC4706
_DSC4719
_DSC4729
_DSC4751
_DSC4758
_DSC4766
_DSC4783
_DSC4792
_DSC4812
_DSC4850
_DSC4854
_DSC4857
_DSC4868
_DSC4896
_DSC4989
_DSC5006
_DSC5130
_DSC5144
_DSC5153
_DSC5158
_DSC5176
_DSC5231
_DSC5284
_DSC5312
_DSC5339
_DSC5352
_DSC5399

0 Responses to யேர்மனியில் மாவீரர் நாள் நிகழ்வு: பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வுடன் பங்கேற்பு.

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com