
முன்னாள் படைத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா.
எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பாக பிரதான கட்சிகளின் நிலைப்பாடு வெளியானதும் தனது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பார் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு:
பொதுமக்களின் நன்மைக்காக எனது ஒத்துழைப்பை வழங்குவேன். மக்கள் தமக்கு நன்மையளிக்கக் கூடியவிடயம் என ஒன்றை எதிர்பார்த்தால் அதற்கு நான் எனது ஒத்துழைப்பை வழங்குவேன். முக்கிய அரசியல் கட்சிகள் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும். நான் எனது எதிர்காலத் திட்டம் குறித்து வெளிப்படுத்துவேன்.
நான் ஒரு போதும் தோற்றதில்லை. பொது மக்கள் இன்னும் சில நாள்களுக்கு பொறுமையாயிருக்க வேண்டும் என்றார்.
0 Responses to இதுவரை நான் தோற்றதே கிடையாது..ஜெனரல் சரத் பொன்சேகா