கடந்த திங்கட்கிழமை சாயிபாபாவின் பிறந்த தினமாகும். இந்த தினத்தில் ஜனாதிபதிக்கான தேர்தலை அறிவித்த அரச தலைவர் மகிந்த ராஜபக்சா அதன் பின்னர் சாயிபாபா பூசை வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார். சரத் பொன்சேகாவே வரப்போகும் தேர்தலில் வெற்றிபெறுவார் என புலனாய்வுத் தகவல்கள் கூறுவதாலேயே இந்த வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த பூசை வழிபாடுகள் மஹிந்தவின் மனைவி சிராந்தி ராஜபக்சாவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், மகிந்தாவிற்கு நெருக்கமான பல அமைச்சர்களின் மனைவிமார்களும் பூசைக்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ள இவ்வேளை, இப்பூசைக்கு கோத்தபாயா மற்றும் பசில் ராஜபக்சா போன்றவர்கள் அழைக்கப்பட்டிருக்கவில்லை.
கொழும்பில் உள்ள சாயி பூசகர் ஒருவரும் அழைக்கப்பட்டு அங்கு சாயி பஜனையும் நடத்தப்பட்டதோடு மஹிந்தவின் போதாத காலத்தை விரட்டுவதற்காக பல சாயி பூசைகளும் அங்கு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தேர்தலில் வெற்றிபெற மகிந்த தற்போது சாயி பாபாவின் ஆசிகள் வேண்டி காத்திருப்பதாக கொழும்பில் இருந்து அதிர்வின் நிருபர் மெலும் தெரிவித்தார்.



0 Responses to அலரி மாளிகையில் மஹிந்த சாயிபாபா பூசை!