தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நாளை 55 வது பிறந்த நாள். இத்தினத்தில் அல்லது மாவீரர் தினமான நாளை மறுதினத்தில் தமிழர்களுக்கு பெரும் ஆச்சரியம் ஒன்று நிகழும் என்று இலங்கையின்ன் வெளிவரும் ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கை இறுதிப்போரில் விடுதலைப்புலிகளின் தலைவர் கொல்லப்பட்டுவிட்டதாக அவ்வியக்கத்தைச் சேர்ந்த பத்மநாதன் அறிவித்தார்.
ஆனால், நெடியவன் இதற்கு மறுப்பு தெரிவித்தார். பழ.நெடுமாறன், வைகோ உட்பட தமிழ் தலைவர்கள் பலரும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவே அறிவிப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாளை வரும் பிரபாகரன் பிறந்தநாளை உலகமே எதிர்ப்பார்க்கிறது. நாளை அல்லது நாளை மறுதினம் மாவீரர் தினத்தில் தோன்றி மாவீரர் தின உரையாற்றுவார் பிரபாகரன் என்று உலகமே எதிர்பார்க்கிறது என்று தெரிவித்துள்ளது.
0 Responses to பிரபாகரன் பிறந்த நாள்: பெரும் ஆச்சரியம் நிகழும்