Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத் தமிழர்கள் மீது 1956ஆம் ஆண்டி லிருந்து 2009ஆம் ஆண்டு மே மாதம் வரையில்,

இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளின் தகவல் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட "தமிழினப் படுகொலைகள்" என்ற ஆவண நூல் மிகவிரைவில் வெளிவரவுள்ளது என இணையத்தளத்தில் செய்தி வெளியாகி யுள்ளது.

இதுகுறித்து அதில் மேலும் தெரிவிக்கப் பட்டிருப்பவை வருமாறு
கிளிநொச்சியை மையமாகக் கொண்டு இயங்கி வந்த "வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம்" தன்னிச்சையாகவும், சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களுடன் இணைந்தும் இத்தகவல் தரவுகளை சேகரித்து ஆவணமாக்கியுள்ளது.

ஈழத்தமிழர் மீதான படுகொலைகளில் மிக மோசமான படுகொலைகளின் தொடக்கமான 1956ஆம் ஆண்டு இங்கினியாகலைப் படுகொலையிலிருந்து 2008ஆம் ஆண்டு இறுதிவரை சேகரிக்கப்பட்ட விவரங்கள் இந்நூலில் பதிவாக்கப்பட்டுள்ளன. மேலும் இந்நூலில் இறந்தவர்கள் யார், காயமடைந்தவர்களின் பெயர்கள், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், 14 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் எத்தனை பேர், படுகொலை நடந்த இடம், திகதி ஆகியவற்றுடன் படுகொலை நிகழ்ந்த இடங்களின் வரை படங்களும், படுகொலையில் சிக்குண்டவர்களின் ஒளிப்படங்களும் முடிந்தவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆவணப்புத்தகத்திற்கான முன்னுரையை அமெரிக்காவில் ஈழத்தமிழர்களின் மனித உரிமை மற்றும் விடுதலைக்காகச் செயற்படும் திருமதி.எலின் சாடார் எழுதவுள்ளார். புத்தகத்தின் அட்டை வடி வமைப்பை ஈழத்து ஓவியர் நந்தா கந்தசாமி மேற்கொள்கிறார். இந்நூல், தமிழ், ஆங்கிலம், பிரன்ஞ், ஜேர்மன், சிங்களம் மற்றும் ஹிந்தி ஆகிய ஆறு மொழிகளில் வெளிவர உள்ளது. வடகிழக்கு மனித உரிமைகள் செயல கத்திடமிருந்து உரிமம் பெற்றுள்ள "மனிதம்" அமைப்பு மற்றும் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் ஆகியன இணைந்து இந்நூலை வெளியிடுகின்றன.

0 Responses to ஆவண நூலாகத் தயாராகிறது ஈழத் தமிழினப் படுகொலை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com