Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரச தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுவேட்பாளராக சரத் பொன்சேகா போட்டியிடுவார் என்று ஐக்கிய தேசிய முன்னணி முதன் முறையாக நேற்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் உத்தியோகபூர்வ அறிக்கை தேர்தல் தொடர்பான அரசின் வர்த்தமானி வெளியாக பின்னர் வெளியிடப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பொதுவேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய முன்னணி முன்வைத்த 10 நிபந்தனைகள் தொடர்பில் சரத் பொன்சேகாவுடன் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் -

தேர்தல் சின்னம் தொடர்பாக இன்னும் முடிவாகவில்லை என்றும் இது குறித்த அறிவிப்பு கட்சியின் உத்தியோகபூர்வ அறிக்கையுடன் தெரியப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to பொன்சேகா தேர்தல் சின்னம் குறித்து விரைவில் அறிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com