தமிழ்நாடு கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் நேற்று வெள்ளிக்கிழமை புலிக்கொடியேற்றப்பட்டும், கருப்பு கொடியேற்றப்பட்டும், தீபமேற்றப்பட்டும் இருந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாவீரர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது என்று காவல்துறையினர் விழிப்புடன் இருந்தனர். இந்நிலையில் கும்மிடிப்பூண்டியில் இலங்கை அகதிகள் முகாமில் வெள்ளிக்கிழமை காலை முகாம் மக்கள் கூடும் பெரிய ஆலமரத்தின் உச்சியில் புலிச்சின்னம் தாங்கிய விடுதலைப் புலிகளின் கொடியேற்றப்பட்டிருந்தது. முன்தினம் நள்ளிரவே முகாம் பகுதியைச் சேர்ந்த யாரோ சிலர் விடுதலைப் புலிகளின் கொடியை ஆல மர உச்சியில் கட்டியிருக்கிறார்கள்.
அதேபோல, கும்மிடிப்பூண்டியில் இருந்து முகாமுக்கு வரும் வழியில் முகாமின் நுழைவாயிலில் ஒரு பனை மரத்தில் வாழை மரம் கட்டி, அதில் தீபம் ஏற்றப்பட்டு கருப்பு கொடி கட்டப்பட்டு இருந்தது. அந்த பனை மரத்தில் ஒட்டப்பட்டிருந்த துண்டு பிரசுரத்தில் மாவீரர் நாள் என்று எழுதப்பட்டும், "யூதர்களின் அர்ப்பணிப்பில் விடிந்தது இஸ்ரேல், தமிழர்களின் அர்ப்பணிப்பில் விடியும் தமிழீழம்" என்று எழுதப்பட்டிருந்தது.
அதேபோல, கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமை சேர்ந்த மாவீரன் முகாமில் சில மாதங்களுக்கு முன்பு விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற போரின் போது அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட முத்துக்குமரன், முருகதாசு, இராஜா, அமரேசன், பாலசுந்தரம்,கோகுல், ராஜசேகர், எழில்வேந்தன்,இரவிசந்திரன், தமிழ்வேந்தன், சீனுவாசன், தமிழ்வேந்தன், சிவபிரகாசம், இரவி ஆகிய 14 பேர்களின் படங்களை தாங்கி பதாகை வைக்கப்பட்டு அதன் முன்பே வாழை மரம் நடப்பட்டு அதன் உச்சியில் தீபம் ஏற்றப்பட்டிருந்தது.

0 Responses to தமிழக அகதிமுகாமில் மாவீரர் தினத்தை முன்னிட்டு ஏற்றப்பட்ட புலிக்கொடி!