பிரித்தானியாவில் தேசிய நினைவெழுச்சி நாள் இன்று பொதுச்சுடர் ஏற்றத்துடன் ஆரம்பித்து, தொடர்ந்து இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
12.45 மணியளவில் ஆரம்பித்த ஈகைச்சுடரேற்றம் தற்பொழுதும் (பிற்பகல் 3.15) தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மக்கள் தொடர்ந்து வந்து வணக்கம் செலுத்திய வண்ணம் இருக்கிறார்கள்.
மண்டப காவலர்கள் மக்கள் வெள்ளத்தினை கட்டுப்படுத்த முடியாமல் பெரும் சிரமத்தினை எதிர்நோக்கியபடி இருக்கிறார்கள்.
அதைவிட பெருந்திரளான மக்கள் கூட்டம் மண்டபம் நிறைந்த காரணத்தினால் வெளியில் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு மக்கள் வெளியேற வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள்.
இத்தனை இடர்களுக்குப் பின்னும் சவால்களுக்குப் பின்னும் பெருந்திரளான மக்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டமை எங்களுடைய இலட்சியப் பாதை என்றும் மாறாது என்பதையே சுட்டிக்காட்டுகிறது.
கடந்த வருடம் தேசிய நினைவெழுச்சி நாளில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கையை விட இந்த வருடம் உணர்ச்சிப் பெருக்குடன் கலந்து கொண்ட மக்கள் தற்பொழுதே 50,000 த்தை தாண்டி நிற்கிறது.

0 Responses to பிரித்தானியாவில் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு: 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பு