ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைக்காரியாலயமான சிறீகோத்தாவில் தொழிலாளர் சம்மேளன தலைவர்கள் மத்தியில் பேசுகையிலேயெ அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் -
நாற்பது வருடங்களாக அரச சேவையில் பணிபுரிந்த எனக்கு அரச உத்தியோகத்தர்களின் சம்பளப்பிரச்சினை நன்றாகவே தெரியும். நான் இராணுவ தளபதியாக பதவிவகித்த காலப்பகுதியில் 60 ஆயிரம் ரூபாவை சம்பளமாக பெற்றேன். அதில் 40 ஆயிரம் ரூபா அத்தியாவசிய செலவுகளுக்காகவே தேவைப்பட்டது.
இந்நிலையில், சாதாரண அரச உத்தியோகத்தர்களின் நிலையை நான் நன்றாகவே புரிந்துகொள்கிறேன். நான் பதவிக்கு வந்தால், அந்த மாதம் முதல் அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும். ஓய்வூதிய மற்றும் சமூர்த்தி கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்பவர்களுக்கும் கொடுப்பனவு உயர்வை அமுல்படுத்துவேன்- என்று கூறினார்.



0 Responses to அரச உத்தியோகத்தர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு: பொன்சேகா