Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய அரசின் காலத்தில்தான் மனித உரிமை மீறல் சம்பவங்கள் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளன. ஆட்சி மாற்றம் ஒன்றின் மூலம்தான் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற மனித உரிமைகள் தின நிகழ்வில் பேசுகையில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு...

நான் ஒன்றைப் பெரியோர்களிடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அரசியல் என்றாலே அது உரிமைக்கான தேடல்தான். அரசியல் வாதிகளில், நாடாளுமன்ற உறுப்பினர்களில், அமைச்சர்களில், மக்கள் பிரதிநிதிகளில் தனிப்பட்ட முறைகளில் சில கொள்கை வேறுபாடுகள், சில குறைபாடுகள் இருக்கலாம் என்றாலும், அரசியல் அதிகாரம் திட்டவட்டமாக அவசியமானது. அதை எவரும் குறை கூறக்கூடாது. அரசியல் இல்லை என்றால், ஜனநாயகம் இல்லை என்றால் நாம் கற்காலத்துக்குத்தான் செல்ல வேண்டும். அத்தகைய நோக்கம் எவருக்கும் இருக்காது என்று நினைக்கின்றேன். நான் ஒன்றை இங்கு ஞாபகப்படுத்த வேண்டும். கடந்த 3, 4 வருடங்களாக நாடு முழுவதும் ஏராளமான தமிழர்கள் காணாமல் போய், கடத்தப்பட்டு இருக் கிறார்கள், சட்டவிரோதமாக படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். எனது மாவட்டமான கொழும்பிலும், புறநகர்ப் பகுதியிலும் ஏராளமான தமிழர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். காணாமல் போயுள்ளார்கள். அவர்களைப் பற்றிய தக வல்கள் எமது மக்கள் கண்காணிப்புக் குழு விடம் இருக்கின்றன.
அரசியல் ரீதியான கடத்தல்கள், அரசியல் ரீதியான படுகொலைகளை நாம் சந்திக்கும் போது அவற்றிற்கு அரசியல் ரீதியாக முகம் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

நான் ஒரு மனித உரிமைப் போராளி அல்ல. ஆனால் மனித உரிமைகளுக்கு சார்பான போராட்டங்கள், மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் கடத்தல்கள், காணாமல் போதல்கள் என்பன எம்முன் வந்தபோது நாம் கைகட்டிப் பார்த்திருக்கவில்லை. மாறாக எமது மக்களின் உரிமைகளுக்காக நாம் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம். தற்போதும் போராடி வருகின்றோம்.

எமது குரல் சர்வதேச ரீதியாக இன்றும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றது.
.நா. சபையை எடுத்துக் கொண்டால் மனித உரிமை சாசனத்தில் பல்வேறு உரி மைகள் வரிசையாக அடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் உயிர் வாழும் உரி மையே முக்கியம் வாய்ந்தது. வடக்குக் கிழக்கிலே வாழ்கின்ற மக்கள் குறிப்பாகத் தமிழர்கள் கடந்த மூன்று, நான்கு வருடங்களாக உயிர் வாழும் உரிமை பறிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வரு வதை எவரும் மறுக்க முடியாது. இந்த நாட்டிலே அரச சார்பான பயங்கர வாதமும் அரச சார்பற்ற பயங்கரவாதமும் இருக்கின்றன என்பதை எவருமே மறுக்க முடியாது. இந்தப் பயங்கரவாதத்திற்கு மத் தியில் சிக்கித் தவிப்பவர்கள் மக்களே.
தற்போது சிறைச்சாலைகளில் உள்ள தமிழ்க் ககைதிகள் சாகும்வரை உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த சாத்வீக உண்ணாவிரதப் போராட் டங்கள் ஏற்கனவே பல தடவைகள் நடை பெற்றுள்ளன. இந்த நாட்டிலே போர் முடிந்துவிட்டது,அமைதி திரும்பிவிட்டது, வசந்தம் வீசுகிறதென்றால் ஏன் இந்தச் சிறைக் கைதிகளுக்கும் கிடைக்கக்கூடாது? அவர்களின் வாழ்கையிலும் ஏன் வசந்தம் வீசக் கூடாது?
நாம் இங்கு ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். இந்த இளைஞர்களுக்கு, யுவதிகளுக்கு பொது மன்னிப்பு கொடுங்கள். எனக்குத் தெரியும். தெற்கிலே பல சட்ட விரோதமான முகாம்கள் இருக்கின்றன. அங்கே பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு நாம் கோர வேண்டும். நாட்டில் அனைவரும் சுமுகமான முறையில் வாழ வேண்டும் என்று இந்த மனித உரிமைகள் தினத்தில் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.

0 Responses to ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே மனித உரிமை மீறல்களும் முடிவுக்கு வரும் ..

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com