Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கனடாவுக்கு 76 பேருடன் சென்ற அகதிகள் கப்பலிலுள்ள 23 ஈழத்தமிழர்கள் கடந்த வியாழக்கிழமை கனடா குடிவரவு திணைக்களத்தினால் அந்நாட்டில் தங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் 27 பேர் ஜனவரி முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் விடுவிக்கப்படவுள்ளனர் என்று குடிவரவுத்துறை சார் சட்டத்தரணி தெரிவித்திருக்கிறார்.

விடுவிக்கப்பட்டவர்கள் அவர்களது உறவினர்களுடன் கனடாவில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் உறவுமுறை தொடர்பான விவகாரங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இவர்கள் கனடாவில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தாலும் இவர்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அதற்கு ஏற்ப இவர்களது வங்கி கணக்கு முதல் அனைத்து விவரங்களும் கனடிய குடிவரவு திணைக்களத்தினரால் பெறப்பட்டுள்ளது என்றும் மேற்படி சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி கனடாவுக்கு சென்ற ஓஷன் லேடி என்ற இந்த கப்பலிலுள்ள 76 பேரும் கனடிய தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to கனடாவுக்கு சென்ற கப்பல் அகதிகள் 23 பேர் விடுதலை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com