அவர்கள் தாக்கப்பட்டு விழுத்தப்பட்டனரா? கொக்குவில், நந்தாவில், அம்மன் கோயில் கேணியில் குளிக்கச் சென்ற இரு பாடசாலை மாணவர்கள் நேற்று முற்பகல் 11 மணிக்கு நீரில் மூழ்கி மரணமான பரிதாபகர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் கோண்டாவில் இந்து மகாவித்தியாலய மாணவனான ரஞ்சன் மயூரன் (வயது 15 கோண்டாவில் கிழக்கு) சடலமாக கேணியிலிருந்து மீட்கப்பட்டார்.
மூச்சுத் திணறிய நிலையில் மீட்கப் பட்ட கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலய மாணவனான ரவி ரதிமதன் (வயது 18கோண்டாவில் கிழக்கு)ஆஸ்பத்தி ரிக்கு எடுத்துச்செல்லும் வழியில் மரணமானார்.
இந்தச் சம்பவம் குறித்து முதற் கொண்டு கிடைத்த தகவல் வருமாறு:
கொக்குவில் நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்மன் ஆலய தீர்த்தக் கேணியில் நீராடுவதற்காக இளைஞர்கள் மூவர் சென்றிருந்தனர். அவர்களில் இரு வர் நீரினுள் மூழ்குவதை வெளியே இருந்து அவதானித்த மற்றைய இளைஞர் ஓடிச் சென்று அப்பகுதி மக்களிடம் தெரிவித் துள்ளார். அப்பகுதிக்கு அவர்கள் விரைந்து வந்த போது ஒருவர் நீரினுல் மூழ்கி இறந்த விட்டார். மற்றவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அந்த இளைஞரை மீட்டு யாழ்.ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவரும் உயிரிழந்து விட்டார்.
இதேவேளை, இந்தச் சம்பவம் குறித்து வேறு விதமான தகவல்களும் தெரிவிக்கப்பட்டன. அவை குறித்து உறுதிப்படுத்தப் படவில்லை.எனினும், மரணமடைந்த இளைஞர்களுடன் கேணிக்குள் சென்றி ருந்த மற்றைய இளைஞர் கூறியிருப் பதாவது:
தானும், உயிரிழந்தவர்களும் கேணியின் படியில் இருந்த வேளையில் அங்கு வந்த இருவர் திடீரென தாக்குதல் நடத்தினர் என்றும் பின்னர் அவர்கள், அவர்கள் இருவரையும் கேணிக்குள் தள்ளிவிழுத்தினர் என்றும் அவவேளை தான் அங்கிருந்து ஒடித் தப்பிவிட்டார் என்றும் கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

0 Responses to கோயில் கேணியில் மூழ்கி இரு மாணவர்கள் பரிதாப மரணம்