Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் 19ஆம் நாள் சனிக்கிழமை கனடா தழுவி நடைபெறவுள்ள வட்டுக்கொட்டைத் தீர்மானம் மீதான வாக்குக்கணிப்பு 31 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறவுள்ளதாக தமிழர் தேர்தலுக்கான கனடிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

31 வாக்களிப்பு நிலையங்களில் 62 வாக்களிப்ப இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவ்வியந்திரங்கள் ஈடுபடுத்தப்படும்போது இயந்திரங்கள் பழுதடைந்தால் அதனை ஈடுசெய்வதற்காக மேலதிக இயந்திரங்களும் தயார் நிலயில் உள்ளன.

இத்தேர்தலை கனடியத் தேர்தலுக்கான கனடிய கூட்டமைப்பினால் ஒழங்ககை;கப்பட்டு

கனடாவில் தேர்தலை நாடாத்தும் சுயாதீனமான ஒரு நிறுவனத்தின் வாக்களிப்பு இயந்திரங்களின் உதவியுடன் இந்நிறுவனத்தின் மேற்பார்வையில் நடத்தப்படுகின்றது.

அத்துடன் கனடியச் சமூகத்தினரை சோர்ந்த பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் கண்காணிப்பில் ஈடுபடுவர்.
நவீனத்துவப்படுத்தப்பட்ட இயந்திரங்களினூடாக வாக்குப்பதிவு மேற்கொள்ளப்படுவதினால்

சுத்தமான சனநாயக முறை கடைபிடிக்கப்படுவதுடன் தேர்தல் முடிவடைந்து ஒருசில மணித்தியாளங்களில் முடிவுகள் வெளிவந்துவிடும் என கூறப்படுகின்றது.

தேர்தல் முடிவடைந்ததும் ரொறன்ரோ பெரும்பாகத்தில் பத்திரிகையாளர் மாநாட்டில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என அறியப்படுகின்றது.
தமிழ்ழீழத்துக்கு வெளியே ஈழத்தமிழர் அதிகமாக வாழும் நாடு கனடா என்பதனால் கனடவாழ் தமிழ் மக்கள் மாத்திரமல்ல முழு உலகே இத்தேர்தலை எதிர் பார்த்த வண்ணமுள்ளனர். இத்தெர்தல் முடிவுகள் ஈழத்தமிழரின் எதிர்கால சனநாயக ரீதியான போராட்டத்துக்கு பெரிய உந்து சக்தியாக அமைவதுடன் மேற்குலகின் அங்கீகாரத்துக்கான முதற்படியாகவும் அமையும் எனவே அனைத்து கனடிய தமிழ் மக்களும் இத்தேர்தலில் பங்குபற்றி வாக்களிப்பது முக்கியம் என பெயர் குறப்பிட விரும்பாத கனடியப்பிரமுகர் ஓருவர் தெரிவித்துள்ளார்
தேர்தல் குழுவினர் 31 வாக்களிப்பு நியைங்களையும் நாளை சனிக்கிழமை தேர்தலுக்கான

hயர் நிலையில ;வைத்திஐப்பதற்பகக தயாரிப்பு வேலைகளில் ஈடுப்டுள்ளனர்.

இன்னுமும் ஓரு நாளே இருக்கும் நிலையில் மணித்தியாளங்கள் குயைக்குறைய கனடா வாழ் மக்களிடையெ பரபரப்பும் ஆர்வமும் காணப்படுவதனை காணக்கூடியதாகவுள்ளது.

தமிழ் ஊடகங்கள் குறிப்பாக வானொலி தெலைக்காட்சி என்பன இத்தேர்தல் பற்றிவிசேட ஒலி ஒளி பரப்பை மேற்கொண்டவண்ணமுள்ளன. தமிழ் பத்திரிகைகள் இத்தேர்தல்பற்றிய செய்திகளுக்கு முக்கிய இடம் கொடுத்துள்ளன. தமிழக தலைவர்களின் பேட்டிகயையும் வெளியிட்டவண்ணமுள்ளன.

பல நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தேர்தலுக்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஊர்ச்சங்கங்கள் விளையாட்டுக்கழகங்கள், இளையோர் அமைப்புகள் என பல்வேறு தமிழ் சமூக அமைப்புக்களும் தேர்தலுக்கான பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்

கனடாவில் தமிழர்கள் வாழும் நகரில் உள்ள அனைத்து தமிழ் வர்த்தக நிலையங்களிலும் கனடியத் தமிழர் வாக்குக் கணிப்பு பற்றிய பெரிய சுவராட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தேர்தல் காலத்தில் வீடுகள் தோறும் நாட்டப்படும் பதாகைகள் இத்தேர்தலையொட்டி கனடியத்தமிழர்கள் தமது வீடுகளுக்கு முன்னால் நாட்டியுள்ளனர்.

கனடா தழுவி 31 வாக்களிப்பு நிலையங்களின் விபரங்கள், வாக்களிக்கச் செல்லும்போது கொண்டுசெல்ல வேண்டிய அடையள ஆவணங்கள் பற்றிய விபரங்கள் மற்றும் மாதிரி வாக்களர் அட்டை என்பன உள்ளடக்கிய துண்டுப்பிரசுரம் ஒன்று தமிழர் தேர்தலுக்கான கனடியக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது. அத்துண்டுப்பரசுரத்தில் முக்கியமாக வாக்களிப்தற்கு பதிவு அவசிமில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே முன்பதிவு செய்யாதோர் தாம் புதிவு செய்யவில்லையே என்ற கவலையை விட்டு எவ்வித பதிவுகளுமின்றி வாக்களிக்கமுடியும்.


தமிழர்கள் அதிகமாக வாழும் ரொரன்ரோ பெரும் பாகத்தில் மட்டும் 20 வாக்களிப்பு நிலையங்கள் அமையவுள்ளன. மற்றும் மொன்றியல், ஒட்டாவா, வன்கூவர், கல்கரி, எட்மிண்டன், வோட்டலூ, வினிப்பெக், கோன்வல், கலிபக்ஸ் போன்ற கனடாவின் பாரிய நகரங்களிலும் வாக்களிப்பு நிலையங்கள் அமையவுள்ளன.

காலை 9 மணி முதல் மாலை 9 மணிவரை தொடர்ச்சியாக 12 மணித்தியாலங்கள் மக்கள் வாக்களிக்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழர் தேர்தலுக்கான கனடிய கூட்டமைப்பு மேலும் அறிவித்துள்ளது.

அத்துடன் வாக்களிக்க வரும்போது மக்கள் கொண்டு வரவேண்டிய அடையாள ஆவணங்கள் குறித்தும் அவ்வமைப்பு மேலும் அறிவித்துள்ளது. அது குறித்த விபரங்களையும், வாக்களிப்பு நிலையங்களின் விபரங்களையும் அவ்வமைப்பின் இணையத்தளம் www.tamilelections.ca இல் நீங்கள் பாhக்;கலாம்

0 Responses to கனடாவில் நாளை சனிக்கிழமை தமிழர் தோதல் 31 வாக்களிப்பு நிலயங்களில் 62 இயந்திங்களினூடாக வாக்களிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com