சிறீலங்காவில் இடம்பெறும் சட்ட ஒழுங்குமுறை குறித்து டரான்பெரன்சி இன்டர்நெசனல் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
நீண்டகாலம் இடம்பெற்றுவந்த யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் சட்ட ஒழுங்கை நாட்டில் நிலைநாட்டுவதற்கு பல நெருக்குவாரங்கள் காணப்படுவதாக அது தெரிவித்துள்ளது.
நாட்டில் ஐனநாயக விழுமியங்களை கட்டிக்காத்தல், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டல், குற்றச் செயல்களுக்குத் தண்டனை வழங்குதல் போன்ற விடயங்களில் சிறீலங்கா அரசாங்கம் காட்டும் அக்கறை போதுமானதல்ல என அது சுட்டிக்காட்டியுள்ளது.
ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் தொடர்பில் சிறீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என அது குறிப்பிட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை 34 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் எனக் கூறியுள்ளது.
சிங்கள, தமிழ், முஸ்லிங்கள் இடையே உறவுகளை வலுப்படுத்தும் ஐனநாயக ஆட்சி முறையை முன்னெடுக்க வேண்டும் அந்த அமைப்பு மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.

0 Responses to சிறீலங்காவில் சட்ட ஒழுங்கு திருப்தி அளிக்கவில்லை