வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீது பிரானஸில் உள்ள புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட தேர்தலில் 99 சதவீதமான மக்கள் தனித்தமீழமே தீர்வு என வாக்களித்துள்ளனர். கடந்த சனி ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற இந்த தேர்தலில் வாக்களித்த 31 ஆயிரத்து 148 பேரில் 30 ஆயிரத்து 936 பேர் தனித்தமீழம் அமைக்கப்படவேண்டுமா என்ற கேள்விக்கு ஆம் என்று வாக்களித்துள்ளனர்.
பிரான்ஸை தளமாக கொண்ட தமிழீழ இல்லம் என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தேர்தலில் பெருந்தொகையாக வாக்காளர்கள் கலந்துகொண்டனர்.
தனித்தமிழீம் அமையவேண்டுமா என்று தேர்தலில் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு வாக்களித்தவர்களில் 99.32 சதவீதமானவர்கள் ஆம் என்றும் 43 பேர் இல்லை என்றும் வாக்களித்துள்ளனர். 169 வாக்குகள் செல்லுபடியற்ற வாக்குகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸில் உள்ள 61 ஈழத்தமிழ் அமைப்புகளினதும் அநநாட்டு அமைப்புக்கள் பலவற்றினதும் ஆதரவுடன் இயங்கும் தமிழீழ இல்லம் என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தேர்தலில் பிரான்ஸ் நாட்டின் மாநில மற்றம் கவுன்ஸில் தலைவர்கள், உறுப்பினர்கள் முழு ஆதரவு வழங்கியுள்ளனர். தேர்தல் கண்காணிப்பு, வாக்கு எண்ணுதல் போன்ற சகல கடமைகளிலும் அந்நாட்டு அமைப்பினர் ஈடுபட்டிருந்தனர்.

0 Responses to பிரான்சில் வரலாறு படைத்த வட்டுக்கோட்டை கருத்துக்கணிப்பு முடிவுகள் - 99 வீதமான வாக்குகள்: "தமிழீழமே இறுதித் தீர்வு"