இலங்கையில் எதிர்க் கருத்துக்களைக் கொண்டவர்களை அடக்கும் செயற்பாடுகளில் ஒன்றாகவே தன்னுடைய கைதைக் கருத முடியும் என்று மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தன்னுடைய கைதின் மூலம் இலங்கை மீது மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணையொன்றை சர்வதேசம் நடத்துவதைத் தூண்டி விட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீ.என்.என் (CNN) செய்தி நிறுவனத்திற்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
‘என்னுடைய கைதினை திட்டமிட்ட முயற்சியாகவே நான் கருதுகின்றேன். எதிர் கருத்துக்களைக் கொண்டவர்கள், விமர்சிப்பவர்கள் மற்றும் சவால் விடுபவர்களை அடக்குவதற்கான தலையீடாகவே உணர முடிகிறது. இலங்கைக்கு வெளியில் வாழ்பவர்களால் நாட்டுக்குள் என்ன நடக்கின்றது என்பதனை அறிய முடிவதில்லை. ஆகவே, இது தொடர்பில் கூடிய அவதானம் செலுத்தப்படும் என நான் எதிர்பார்க்கின்றேன். என்னுடன் நெருக்கமானவர்கள் மற்றும் கடந்த காலங்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்களின் பாதுகாப்பு குறித்து நான் கவலையடைகின்றேன்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 மணியளவில் கிளிநொச்சியில் வைத்து மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான ருக்கி பெர்ணான்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் இரண்டு நாட்களின் பின் நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.

0 Responses to என் கைது எதிர்க் கருத்துக்களை கொண்டவர்களை அடக்கும் செயற்பாடுகளில் ஒன்று: ருக்கி பெர்ணான்டோ