இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் சீனாவின் பிரசனத்தை தவிhக்க முடியாதவாறு மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக ஸ்ரீலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வட பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள உட்கட்டுமான அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு சீன நிறுவனங்களுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்கு சீனாவின் சிக்கிம் வங்கி 6.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது. இந்த கடனுதவியை பெறுவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் சீனாவுடன் பல்வேறு உடன்பாடுகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இந்த கடன் தொகையானது குறிப்பிட்ட காலத்தினுள் வட்டியுடன் மீளச் செலுத்தப்பட வேண்டும்.
அபிவிருத்தி பணிகளில் சீனத் தொழிலாளர்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவார்கள் இதன் மூலம் சீனாவில் உள்ள வேலையற்ற இளைஞர்களில் சிலருக்கு வேலை வாய்ப்பு உறுதிப்படுத்தப்படும்.
இவ்வாறான நிபந்தனைகளுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளதன் மூலம் இலங்கையர்களுக்கான வேலைவாய்புகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன் பொருளாதார முன்னேற்றமும் பின்தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்கும் கடனுதவியில் கணிசமான தொகை ராஜபக்ச குடும்பத்திற்கு கிடைக்கவுள்ளதாகவும் அதன் காரணமாகவே இந்த நிபந்தனைகளுக்கு கட்டுப்பட அரசாங்கம் இணங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எனினும் இலங்கை முழுவதிலும் சீனாவின் ஆதிக்கத்தை பரவச் செய்யும் இந்த நடவடிக்கை குறித்து இந்தியா கடும் விசனமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Responses to சீனாவின் பிரசனத்தை தவிர்க்க முடியாதவாறு மகிந்த அரசாங்கம் நகர்வு!