ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திசநாயக்க அரச தலைவர் தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டை நாளை திங்கட்கிழமை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை இன்று சந்தித்த பின்னர் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். நாளை அவர் கூட்டவுள்ள ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைக்கும் எஸ்.பி.திசநாயக்கவுக்கும் தொடர்ந்து முறுகல் நிலை இருந்துவந்தது. இந்நிலையில், சரத் பொன்சேகாவை எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக நியமிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த எஸ்.பி.திசநாயக்க, தேர்தலில் மகிந்த தோல்வியுற்றால் அமைக்கப்படும் காபந்து அரசின் பிரதமாராக தானே நியமிக்கப்படவேண்டும் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிடம் வலியுறுத்திவந்திருந்தார். அவரது கோரிக்கையை ஐக்கிய தேசிய கட்சி நிராகரித்திருந்தது.
இந்நிலையில், நாளை இடம்பெறவுள்ள ஊடகவியலாளர் மாநாட்டில் தனது கட்சி தாவும் அறிவிப்பை அவர் அறிவிக்கக்கூடும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to மகிந்தவை இன்று சந்தித்த எஸ்.பி.திஸநாயக்க நாளை கட்சி தாவுகிறார்?