Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தில் நாம் தமிழர் இயக்கம், தமிழ் இளையோர் பேரவை- சுவிஸ்சைத் தொடர்ந்து டென்மார்க் மாணவர் சமுதாயமாகிய நாமும் வேட்டைக்காரனை புறக்கணிக்கிறோம் என டென்மார்க் மாணவ சமுதாயம் விடுத்துள்ள அறிக்கையின் விபரம்:

எமது மதிப்புக்குரிய டென்மார்க் வாழ் தமிழ் மக்களே. இளையோர்கள் ஆகிய நாமே சினிமா, இரசிகர்கள் என்ற பொய்மை வாழ்க்கையைத் துறந்து இப்புறக்கணிப்புக்கு முன்வந்துள்ளோம்.

எமது தாயகத்தில் எமக்காக போராடியவர்களை அழித்த இந்தியக் காங்கிரஸ் நரகாசூரர்களுக்கு துணைபோகும் தமிழ்த்திரை சார் தோழர்களுக்கு நாம் பாடம் கற்பிக்க முடிவெடுத்துள்ளோம். அத்துடன் அந்த நாசாகாரச்செயலுக்கு செயல் வடிவம் கொடுக்கும் விதத்தில் இறக்குமதியாளர்கள் என்று புலத்தில் தம்மை அடையாளப்படுத்தும் மானமற்ற தமிழர்களை புலம்பெயர்வாழ் இளையோர் சார்பில் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

நீங்கள் இத்திரைப்படத்தை பார்ப்பதற்கு கொடுக்கும் ஒவ்வொரு டெனிஸ் குரோனரும் எமது உறவுகள் வருந்திச் சாகுவதற்காக நச்சுக்குண்டுகளை வழங்கிய, பெயரில் மட்டும் காந்தியம் பேசும் இந்திய தேசத்துக்குச் சென்றடையும் எம்பதை மறந்துவிடாதீர்கள். இவ் ஒரு திரைப்படத்தை நாம் பாக்காமல் விட்டால் தமிழ்த்தேசியம் வாழும், நாம் பார்த்தால் தமிழ்த் தேசியம் சாகும் என்று முடிவெடுங்கள்.

சினிமாவுக்கும் அரசியலுக்கும் என்ன சம்மந்தம்? என்று கேட்கும் தோழா, அப்படியென்றால் ஏன் எமது மக்கள் படும் துயரங்களை சினிமாவில் வெளிப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் தடைவிதித்துள்ளது? தமிழன் ஒருவனை வைத்து இசையமைத்தால் தமிழனும் சிங்களவனும் பாசமலர்களென்று கதைகூறலாம். இது தான் இன்றைய அரசியல்.

உறவுகளே உங்கள் மனங்களை தெளிவுபடுத்தி மதியினால் முடிவெடுங்கள். நான் திரையரங்கம் செல்லவில்லையென்றுவிட்டு இரவில் ஒளிந்து செல்லாதீர்கள். அறிவுடைய சமுதாயமாகிய வளர்ந்துவரும் நாம் ஒன்றை மட்டும் நன்கு ஆழச் சிந்திப்போம். எமக்கான விடுதலை கிடைத்துவிட்டதா? அதை அழிக்க நினைக்கும் சக்திகள் யார்? அதற்கு நான் துணைபோகப் போகின்றேனா?

உங்கள் இளைய தளபதி, காங்கிரஸ் ஆதரவாளன் விஐய் அன்டனி, எம் உறவுகளைக் கொண்டவர்களுக்கு பாட்டியற்றியவன்.

சன் நிறுவனம்: எம்முறவுகளின் பிணத்தின்மேல் சிம்மாசனமிட்டு அரசியல் நடத்தும் கருணாநிதியின் குடும்பச்சொத்து.

வேட்டைக்காரன் தேவையா? இளைய தலைமுறையே, உனது உணர்வு செத்துவிட்டதா? மானமுள்ள தமிழிச்சி ஒருத்தியின் பிள்ளையில்லையா நீ? தட்டிக்கேள் இவ் அநியாயத்தை. தழைத்தெழும் தமிழ்த் தேசியத்தின் கூரிய கிளைகள் நாங்கள்.

தீண்டாதே வாழ்க தமிழ்த்தேசியம்.

மாணவர் சமுதாயம் - டென்மார்க்.

-அமுதன்

0 Responses to வேட்டைக்காரன்: ஊடக அறிக்கை மாணவர் சமுதாயம்: டென்மார்க்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com