எதிர்க்கட்சிகளின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்தியா செல்கிறார். அங்கு அவர் அந்நாட்டு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து பேசுவார் என்று எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நடைபெறவுள்ள தேர்தலில் இந்தியாவின் ஆதரவு மகிந்தவின் பக்கம் சாய்வதாக ஊகங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்திய தலைவர்களை சந்திக்கவுள்ள ரணில் விக்கிரமசிங்க, அரச தலைவர் தேர்தலில் பொன்சேகா போட்டியிடுவது குறித்தும் அதன் தேவை குறித்தும் அவர் வெற்றிபெற்றால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அரசியல் திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்து, இந்திய தரப்பிடம் ஆதரவு கோருவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் இந்தியா சென்ற கோத்தபாய, பசில், அரச தலைவரின் செயலர் ஆகியோர் அடங்கிய குழு இந்திய தலைவர்களை சந்தித்து முக்கிய பேச்சுக்களை நடத்தி நாடு திரும்பிய கையோடு ரணில் இந்த விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to மீண்டும் இந்திய செல்கிறார் ரணில்!