Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அவுஸ்திரேலியா, மெல்பேர்ன் நகரில் தமிழீழ மாவீரர் நினைவு எழுச்சி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இன்றைய நிகழ்வில் சுமார் இரண்டாயிரம் தமிழ் மக்கள் கலந்துகொண்டனர்.

மெல்பேர்ன், பொரோனியாவில் அமைந்துள்ள ஹங்கேரியன் சமூக மண்டபத்தில் இன்று மாலை நான்கு மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாயின. மண்டபத்தின் வாயிலிலேயே மாவீரர்களின் திருவுருவப்படங்கள் அமைந்த பெரிய பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்வுக்கு வந்தவர்கள் அனைவரும் வாயிலில் வணக்கம் செலுத்திவிட்டு மண்டபத்தினுள் நுழைந்தார்கள்.

நிகழ்வு ஆரம்பமாகும்போதே அரங்கு முற்றாக நிரம்பி, பலநூற்றுக்கணக்கானவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். அவுஸ்திரேலிய மற்றும் தமிழீழ தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் அகவணக்கத்தை தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது. மண்டபத்தினுள் முன்னால் அழகாக அமைக்கப்பட்டிருந்த மாவீரர் திருவுருவப்படங்களுக்கான பந்தலுக்கு வரிசையில் சென்ற மக்கள் அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர்.

அடுத்து, உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்வு இடம்பெற்றது. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் பொறுப்பை ஒவ்வொரு ஈழத்தமிழனும் தாங்கிக்கொள்கிறோம் என்ற உறுதிமொழியை விக்டோரிய மாநில தமிழர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் . சபேசன் கூற, அரங்கில் அனைவரும் திரும்பக்கூறி உறுதிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். அதனை தொடர்ந்து றெவறன் வூட்டன் அவர்கள் வழங்கிய கருத்துரை இடம்பெற்றது.

அதன்பின்னர் எழுச்சி நடனம், எழுச்சிஉரை, கருத்துரை ஆகியவை இடம்பெற்றன. இடைவேளையின் பின்னர், அரங்க ஆற்றுகையாக நாடகம் இடம்பெற்றது. வதைமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் மாவீரர் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் வித்துடல்களாக விதைக்கப்பட்டிருக்கும் மாவீரர் துயிலும் இல்லம் சிறிலங்கா படையினரால் உடைத்து அழிக்கப்பட்டதற்கு எதிராக அழுது, முகாம்களிலிருந்து வெளியே வந்து, உடைக்கப்பட்ட அந்த மாவீரர் துயிலும் இல்லத்துக்கு சென்று விளக்கேற்றும் ஆற்றுகையை உணர்வுபூர்வமாக நடித்துக்காட்டினர்.

அரங்கில் அனைவரது உள்ளத்தை உருக்கும் வகையில் நடித்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை தாயக அவலத்தை கண்முன்னே கொண்டுவந்து காண்பித்தனர். இதனைதொடர்ந்து, இன்றைய மெல்பேரன் மாவீரர் எழுச்சி நிகழ்வுக்காக தமிழர் பேரியக்க தலைவர் பழ.நெடுமாறன் ஆற்றிய உரை அரங்கில் திரையிலிடப்பட்டது.

தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் அடுத்த கட்ட போராட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அவர் பத்திரமாக இருக்கிறார். இது சத்திய வார்த்தைகள் என பழ. நெடுமாறன் அவர்கள் சொன்னபோது அனைத்து மக்களும் கரவொலி எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனை அடுத்து, நிகழ்வுகள் இரவு 9.30 மணியளவில் நிறைவுபெற்றன.

Image Hosting by PictureTrail.com
Image Hosting by PictureTrail.com
Image Hosting by PictureTrail.com
Image Hosting by PictureTrail.com
Image Hosting by PictureTrail.com
Image Hosting by PictureTrail.com
Image Hosting by PictureTrail.com
Image Hosting by PictureTrail.com
Image Hosting by PictureTrail.com
Image Hosting by PictureTrail.com
Image Hosting by PictureTrail.com

0 Responses to அவுஸ்திரேலியா, மெல்பேர்னில் தமிழீழ மாவீரர் நினைவு எழுச்சி நிகழ்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com