இலங்கைத் தமிழர்களின் நிலைமை அமெரிக்காவினதும், ஐக்கிய நாடுகள் சபையினதும் கவனத்திலிருந்து விலகிச் செல்வதாக "இன்னர்சிற்றி" பிரஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, ஐ.நா. பிரதிநிதிகளிடம் வியாழக்கிழமை நியூயோர்க்கில் இலங்கை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகள், அதற்கு அளிக்கப்பட்ட பதில்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இக்கருத்தைத் தெரிவித்துள்ளது "இன்னசிற்றி" பிரஸ்.
அது மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
இலங்கையில் தமிழர்கள் உட்பட சிறுபான்மை இனத்தவர்களின் நிலைமை அமெரிக்காவினதும் ஐக்கிய நாடுகள் சபையினதும் கவனத்திலிருந்து எவ்வளவு தூரம் விலகிவிட்டது என்பது வியாழக்கிழமை புலனாகியது.
அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் சுசன் ரைஸிடம், இலங்கை யுத்தம் குறித்த அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் அறிக்கை மற்றும் இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆகியன குறித்து "இன்னசிற்றி" பிரஸ் வினவியது.
இலங்கை தொடர்பாகவும் ஏனைய இடங்களில் நடைபெற்றவை எனத் தெரிவிக்கப்படும் மக்கள் இடம்பெயர்வு மற்றும் மனித உரிமை மீறல்கள் என்பன தொடர்பாகவும் தீவிரமாக உடனடி ஆய்வொன்றை மேற்கொள்வோம் என சுசன் ரைஸ் தெரிவித்தார்.
இந்தக் கரிசனைகள் குறித்து என்ன நடவடிக்கைகளை இருதரப்பு அடிப்படையில் மேற்கொள்ளலாம் என ஆராய்வோம் என்றார் அவர்.
கடந்த வாரம் யுத்தக் குற்றங்களுக்கான தூதுவர் ஸ்டிபன் ரப்பிடம் இலங்கை யுத்தக் குற்ற அறிக்கை பற்றிக் கேள்வி எழுப்பினோம்.
அவர் அதற்கு நாங்கள் தீவிரமாக அதனை வற்புறுத்துகிறோம் என்றார்.
எனினும், உண்மையில் என்ன நடைபெறுகின்றது என்பது தெரியவில்லை.
இதேவேளை, செனட்டர் கெரி இலங்கையுடன் நட்புறவைப் பேணுமாறு வற்புறுத்தும் அறிக்கையொன்றைத் தயாரித்துள்ளார்.
அப்படிச் செய்தால் இதுவரையான அழிவுகளுக்குப் பொறுப்புக் கூறும் கடப்பாடு என்னாவது?
இலங்கையில் அவசியமான மூன்று விடயங்களில் பதில் அளிக்கும் கடப்பாடும் முக்கியமானது என ஐ.நாவும் தெரிவித்திருந்தது.
இலங்கைக்குப் பலதடவை விஜயம் மேற்கொண்டுள்ள மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோம்ஸிடம் மெனிக்பார்ம் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் வேறு முகாம்களில் அடைக்கப்படுதல் மற்றும் காணாமற் போதல் குறித்து வியாழனன்று கேள்வி எழுப்பினோம்.
இதற்குப் பதிலளித்த ஜோன் ஹோம்ஸ், "நான் அதனைக் காணாமற்போதல் என அழைக்கமாட்டேன். விடுதலைப் புலிகளுடன் முன்னர் ஒத்துழைத்தவர்கள் இனம் காணப்பட்டு புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப்படுகின்றனர் என்றே கருதுகிறேன்." என்றார்
இப்படி அந்தச் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

0 Responses to இலங்கைத் தமிழர் நிலை மீதான கவனம் ஐ.நா. மற்றும் அமெரிக்காவிடம் இருந்து விலகுகிறது