Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நூற்றாண்டில் ஐரோப்பிய படையெடுப்பாளர்களிடம் இறைமையையும், சுதந்திரத்தையும் ஈழத்தமிழ் மக்கள் இழந்ததின் பின் 19ஆம் நூற்றாண்டில் அதனை சிங்களவர்கள் கையில் விட்டுச் சென்றனர் ஆங்கிலேயர். அதன் பின் தொடர்ந்த சிங்கள பேரினவாத வன்முறை தழுவிய அடக்குமுறையைத் தொடர்ந்தும், 1972ல் சிங்களம் தனித்துவமாக அமுல் நடத்திய குடியரசு அரசியல் திட்டத்தைத் தொடர்ந்தும், 1976ல் அன்றைய தமிழர் தலைவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்திற்கு வந்தனர்.

இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் தனித்துவமான தேசியமும், பாரம்பரியத் தாயகமும், சுயநிர்ணய உரிமையும் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் இத் தீவின் வடக்கு, கிழக்கு நிலப்பரப்பில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழ் ஈழ அரசு மீண்டும் உருவாக வேண்டும் என அவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை வட்டுக்கோட்டைத் தொகுதியில் மேற்கொண்டனர்.

இலங்கைத் தீவி;ல் அனைத்துத் தமிழ்க்கட்சிகளாலும் 1976ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டு, 1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் அமோக ஆணையைப் பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மான அரசியல் அடிப்படைகளின் இன்றைய வலுவுடைமையைக் கணிக்க கனடா வாழ் ஈழத்தமிழர்கள் மத்தியில் வரும் டிசம்பர் 19ஆம் நாள் சனிக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 9 மணிவரை கனடா தழுவிய தமிழ் மக்கள் வாக்குக்கணிப்பு நடைபெறும் என தமிழர் தேர்தலுக்கான கனடிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தமிழர் பெரும்பான்மையான வாழும் Nhரரன்ரோ பெரும் பாகமான ரொரன்ரோ, ஸ்காபுரோ, எற்றோபிக்கொ, மாக்கம், றிச்மண்ட்கில், வோன், மிசுசாகா, பிரம்டன், பிக்கரிங், ஒட்டாவா, மொன்றியல், வோட்டலு, கோன்வேல், வின்ப்பெக், கல்கரி, எட்மிண்டன், வன்கூவர், கலிபக்ஸ் ஆகிய பெரு நகரங்களில் 25க்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையஙிகள் அமையவுள்ளதாக தமிழர் தேர்தலுக்கான கனடிய கூட்டமைப்பு மேலும் அறிவித்துள்ளது.

18 வயதிற்கு மேற்பட்டவர்கள், அதாவது 1991ஆம் ஆண்டிற்கும் அதற்கு முன்னரும் பிறந்தவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இலங்கைத்தீவில் பிறந்த தமிழ் பேசும் மக்கள் அனைவரும், அவர்களை திருமணம் செய்தவர்களும், அவர்களின் வழித்தோன்றல்களும் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் எனவும் தமிழர் தேர்தலுக்கான கனடிய கூட்டமைப்பு அறிவ்த்துள்ளது.

தேர்தலுக்கான பூர்வாங்க வேலைகள் முடிவடைந்துள்ளன எனவும், கனடிய தேர்தல் கம்பனி ஒன்றின் மேற்பார்வை அணுசரனையிலேயே தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று திருப்புமுனையாகவும் வரலாறாகவும் அனையவுள்ள இத்தேர்தலில் கலந்து கொள்ள கனடிய ஈழத்தமிழ் மக்கள் அதீத ஆர்வம் காட்டுவதாகவும் எமது பெருநகர செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வாக்குக்கணிப்பு குறித்த தரவுகளுக்கும், வாக்களிப்பை சிறப்புற நடாத்த அணுசரனையாக முன்கூட்டிய வாக்காளர் பதிவிற்கும் இணையத்தளம்:TamilElections இற்கோ அல்லது ரொரன்ரோ 416-953-7778, ஸ்காபரோ 416-451-1365 அல்லது 647-299-4624 அல்லது 416-835-1700 அல்லது 416-939-9481, மிசுசாகா 416-833-9016 அல்லது 416-830-4305, பிரம்டன் 416-917-3358 அல்லது 416-319-0206, எற்றோபிக்கோ 416-901-9368 அல்லது 416-545-7955, மாக்கம் 647-284-9058, வோன் 647-822-4972, மொன்றியல் 514-621-7899 என்ற தொலைபேசி இலங்கங்களுடனோ உடன் தொடர்பு கொள்ளுமாறு தமிழ் மக்கள் வேண்டப்படுகின்றனர்.

0 Responses to வரலாறு படைக்க அணிதிரளும் கனடியத்தமிழர்! டிசம்பர் 19ஆம் நாள் சனிக்கிழமை கனடா தழுவிய வாக்குக்கணிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com