Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்காவின் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு அமெரிக்க முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கும் என்று அமெரிக்காவின் பொதுமக்கள் விவகாரங்களுக்கான இராஜாங்க திணைக்களத்தின் உதவி செயலர் பிலிப் ஜே க்ரெளலி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் நடைபெறும் நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் -

சிறிலங்கா அரசின் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாகவும் சிறிலங்கா அரசினால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு விசாரணை செய்யப்படாமலுள்ள மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு அமெரிக்கா முழுமையான ஒத்தழைப்பும் ஆதரவும் வழங்கும். அதேவேளை, இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கமாறு சிறிலங்கா அரசுக்கும் அமெரிக்கா அழுத்தம் கொடுக்கும்.

ஊடகங்கள் மீதான அடக்குமுறை, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படாதவர்கள் விவகாரம், தமிழ்மக்கள் உட்பட சிறுபான்மையின மக்களுடனாக நல்லிணக்க பேச்சுக்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காணும்படி சிறிலங்காவுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் வழங்கிவருகிறது.

அண்மையில் சிறிலங்காவுக்கு விஜயம் மேற்கொண்ட உதவி செயலர் ரொபேர்ட் ப்ளாக் அந்நாட்டு அரசுடன் பல்வேற விடயங்கள் குறித்து பேச்சு நடத்தியுள்ளார். அவற்றில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் குறித்து வலியுறுத்தியுள்ளார் - என்று கூறினார்.

நன்றி: ஈழநேஷன்

0 Responses to சிறிலங்கா மீதான ஐ.நா.வின் விசாரணைகளுக்கு அமெரிக்கா முழுயான ஒத்துழைப்பு வழங்கும்: அமெரிக்கா இராஜாங்க திணைக்களம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com