Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசத்தால் மகிந்த ராஜபக்சவை விட இந்தியாவே அதிகம் அச்சத்துக்கு உள்ளாகியிருக்கிறது. எனெனில், இறுதிப்போரில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக பொன்சேகா வாய் திறந்தால் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்குற்ற விசாரணைகள் தொடர்பில் இந்தியாவும் நீதிமன்றுக்கு செல்லவேண்டியிருக்கும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது:-

சரத் பொன்சேகா விடயத்தில் இந்தியா ஆரம்பம் முதல் தனது அதிருப்தி அடைந்துள்ளமைக்கு காரணம், அவர் திறமையான இராணுவ தளபதி என்பதோ அல்லது அவர் சீன - பாகிஸ்தான் சார்பானவர் என்பதோ அல்ல. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் தெரிந்த ஒரே ஒருவர் அவர்தான். இதனால்தான், பொன்சேகா அரசியலுக்கு வருவதாக செய்தி வெளிவந்த நாள் முதல் இந்தியா கிலி கொண்டுடிருக்கிறது.

விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சிலர் சரணடைவதற்காக வெள்ளைக்கொடியுடன் வந்தபோது சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவின் உத்தரவுப்படி சிறிலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்று பொன்சேகா வெளியிட்ட கருத்து இந்திய தரப்பினை அச்சத்தின் விளிம்புக்கு கொண்டு சென்றிருக்கிறது.

ஏனெனில், போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, விடுதலைப்புலிகளுக்கு எதிராக இராணுவ வியூகங்களை வகுத்த அனைத்து தரப்பினதும் திட்டப்படி ஓகஸ்ட் மாதமளவில் போர் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான திட்டத்தை இறுதியாக்கிவிட்டு பொன்சேகா மே மாதம் சீனாவுக்கு சென்றிருந்தார்.

அரங்கேறிய இந்திய திட்டம்

ஆனால், போரை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை ஊடாகவும் மேற்குலகத்தின் ஊடாகவும் கடும் முயற்சி எடுத்த அமெரிக்கா, சிறிலங்கா விவகாரத்தில் ஆழமாக செல்வாக்கு செலுத்தி, விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை நிறுத்தி அவர்களை காப்பாற்றப்போகிறது என்பதை அறிந்துகொண்ட இந்தியா, எவ்வளவு அழிவுகள் - மக்கள் இழப்புக்கள் ஏற்பட்டாலும் பரவாயில்லை உடனடியாக போரை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று முடிவு செய்தது.

இந்நிலையில், இனிமேல் முன்னேற முடியாது என்ற நிலையில் தனது படையணிகளில் பெரும்பாலனவை விடுதலைப்புலிகளின் தாக்குதலில் முதுகொடிந்த நிலையில் காணப்பட்ட சிறிலங்கா இராணுவத்தை இந்தியா விடவில்லை. படைநடவடிக்கையை நிறுத்தவேண்டாம் என்று கூறி சகல விதமான ஆளணிகளையும் ஆயுதங்களையும் வழங்கி எந்த அழிவை ஏற்படுத்தியாவது விடுதலைப்புலிகளை அழித்தொழிக்குமாறு உத்தரவிட்டது. அக்காலப்பகுதியில் போரை நிறுத்தக்கோரி மேற்குலகம் வழங்கிய அழுத்தத்திலும் பார்க்க கூடுதலான அழுத்தத்தை சிறிலங்கா இந்தியா வழங்கி போரை நடத்தக்கோரியது.

இந்தியாவின் உதவியினாலும் அழுத்தத்தினாலும் ஓகஸ்ட் மாதம்வரை திட்டமிட்டிருந்த படைநடவடிக்கை மே மாதமே முடிவடைந்தது. இந்த நடவடிக்கை நாடு திரும்பிய பின்னரே பொன்சேகாவுக்கு தெரியவந்தது.

இந்தியாவின் மீது விழுந்த இடி

இவ்வாறான ஒரு நிலையில், மகிந்தவுக்கு எதிராக அரசியலில் குதித்துள்ள பொன்சேகா, தான் பதவிக்கு வந்தால் சிறிலங்காவில் நடைபெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இந்த அறிக்கையினால் அதிர்ந்த போன இந்தியாவுக்கு, தற்போது விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விடயம் குறித்து சரத் பொன்சேகா கூறியிருப்பது இடி மேல் இடியாக விழுந்துள்ளது.

பொன்சேகா கூறுவதைப்போல சிறிலங்கா தொடர்பான போர்க்குற்ற விசாரணைகள் சர்வதேசத்தின் முன் இடம்பெறுமானால் தான் குற்றவாளிக்கூண்டில் நிச்சயம் ஏறவேண்டிவரும் என்பதும் இறுதிப்போரில் இடம்பெற்ற பல போர்க்குற்றங்களுக்கு தனது படைகள் நேரடி காரணம் என்றும் இந்தியாவுக்கு நன்றாகவே தெரியும்.

பலமான வல்லரசாக வருவதற்கும் வல்லமை மிக்க நாடாகவும் இந்து சமூத்திரத்தில் கோலோச்சுவதற்கு துடிக்கும் இந்தியா, போர்க்குற்ற விசாரணைகளின் முன் குற்றவாளியாக நிறுத்தப்படுமானால், சிறிலங்கா விவகாரத்தில் இவ்வாளவு காலமும் அக்கறை கொள்ளாமல் உள்ள பெரும்பான்மை இந்தியர்கள், தமது அரசின் மீது காறி உழிழ்வார்கள். ஆளும் காங்கிரஸ் கட்சி இனி வாழ்க்கையில் ஆட்சி கட்டிலை மறந்துவிடவேண்டியதுதான். ஆக, மொத்த இந்தியாவையே உலுப்பிவிடும் நபராக இன்று பொன்சேகா என்ற அரசியல்வாதி ஆளும் காங்கிரஸை மிரட்டிக்கொண்டிருக்கிறார்.

இதனால், பொன்சேகாவை அரச தலைவராக வரவிடுவதில்லை என்பதிலும் பார்க்க அரசியலிலிருந்தே அப்புறப்படுத்தி விடுவது அல்லது "வேறு வழியிலாவது" தீர்வை நாடுவது என்ற திட்டத்தில் மகிந்தவின் பக்கமே இந்தியா சாய்ந்திருக்கிறது.

- என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0 Responses to சரணடைய வந்த வி.பு.தலைவர்களை கொலை செய்ய உத்தரவிட்டது கோத்தபாயவா? இந்தியாவா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com