Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டென்மார்க் கோப்பன்கெயின் நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலக காலநிலை மாற்றத்தின் உச்சி மாநாட்டில் சிறிலங்காவினாலும் அதன் படைகளினாலும் பாவிக்கப்பட்ட இரசாயண வாயூகள், மற்றும் ஐநாவினால் தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகள், கனரக ஆயுதங்கள் போன்ற நாசகார ஆயுதங்களின் பாவனைகளால் அழிக்கப்பட்டும் சிதைக்கப்பட்டும் உள்ள இயற்கை காடுகளால், தமிழர் தாயகத்தின் புவியியல் வெப்பநிலையில் ஒரு சடுதியான மாற்றம் ஏற்படுத்தி உள்ளது. அதன் பச்சை வீட்டு விளைவில் நேரடியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே தமிழர் தாயகமான வன்னிப்பகுதியில் அழிக்கப்பட்ட பயன்தரு வைரமரக்காடுகள் மீண்டும் தலை எடுப்பதற்க்கு 150 வருடங்கள் வரை எடுக்கும். ஆனால் வன்னி பகுதியில் அரச படைகளால் பாவிக்கப்பட்ட கந்தக இரசாயண வாயுக்களினால் புவியின் வெப்ப நிலையின் ஓட்டத்தில் ஒரு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி நீண்டகால வெப்பநிலை அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது. ஆகவே விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் சராசரி எம் தமிழ் உறவுகள் இந்த மழை பொய்ப்பின் காரணமாக வறுமை நிலையை அடைந்து பிறரில் தங்கிவாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனை புவிவெப்பமாதல் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்ளும் 192 நாடுகளின் பிரதிநிதிகளுக்கும், சர்வதேத்திற்கும் எடுத்துக்கூறும் முகமாக பிரித்தானிய தமிழர் போரவையும் டென்மார்க் தமிழர் பேரவையும் இணந்து ஒரு புகைப்பட விழிப்புனர்வு கண்காட்சியையும், அது தொடர்பான தெளிவூட்டல்களையும், இந்த நாடுகளின் பிரதிநிதிகளுக்கு எடுத்துக்கூறுவதோடு மட்டுமல்லாது இது தொடர்பான விளக்கமான தரவுகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

அத்தோடு மட்டுமல்லாது இறுதி யுத்தனின் போது எம் தமிழ் உறவுகள் மீது மிலேட்சத்தனமாக பாவிக்கப்பட்ட கொத்துக்குண்டுகளாலும் கந்தக இரசாயண வாயுக்களாலும் கொல்லப்பட்ட எம் உறவுகளுக்கு சர்வதேசத்திடம் நீதி வேண்டியும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சிறிலங்கா அரசாங்கத்திற்க்கு சர்வதேசரீதியில் அழுத்தங்களை கொடுப்பதற்க்கும் இவர்கள் களத்தில் இறங்கி தமது செயற்பாடுகளை முன் எடுத்து வருகின்றனர்.

100_0323
100_0326
100_0328
100_0329
100_0330
100_0333
100_0334
100_0335

0 Responses to டென்மார்க் கோப்பன்கெயின் நகரில் சர்வதேசதின் முன் நீதி கேட்கும் தமிழர்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com