போர் இடம்பெற்ற கடைசிக்காலப்பகுதியில் சரணடைவதற்கு வெள்ளைக்கொடியுடன் வந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அடுத்த நாடாளுமன்ற அமர்வில் அரசு விளக்கமளிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக இந்தியா சென்றுள்ள ரணில் விக்கிரமசிங்க அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணாவுடன் பேச்சுக்களை நடத்திவிட்டு, சென்னை ஊடாக நாடு திரும்புவதற்கு முன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலரின் உத்தரவின்படி சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்று வெளியிடப்பட்ட கருத்து குறித்து சரத் பொன்சேகாவிடம் விளக்கம் கோரியிருந்தேன். அதற்கு அவர் விளக்கமளித்துள்ளார்.
விடுதலைப்புலிகளி்ன் தலைவர்கள் சரணடைவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளமை குறித்து அரச தலைவர் மகிந்தவுக்கும் கோத்தபாயவுக்கும் அப்போது தெரிந்திருந்தது. அவர்கள் இது விடயம் சம்பந்தமாக கலந்துரையாடியிருக்கிறார்கள். ஆனால், பொன்சேகாவுக்கு இந்த விடயம் கூறப்படவில்லை. நடந்தது எதுவும் அவருக்கு தெரியாது.
பொன்சேகா நாட்டில் இல்லாத சமயம் பாதுகாப்பு அமைச்சின் செயலரின் உத்தரவின்பேரிலேயே பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவை என்ன என்பது குறித்து எந்த தகவலும் அரசினால் வெளியிடப்படவில்லை. இப்போது, விடுதலைப்புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட விடயம் வெளிவந்திருக்கிறது.
இந்த விடயத்தை மறுத்தும் மாறி மாறி குற்றஞ்சாட்டும் வகையிலும் கையாளாமல், உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து அரசு வெளிப்படுத்தவேண்டும். அடுத்த நாடாளுமன்ற அமர்வில் இது சம்பந்தமான அரசின் விளக்கத்தை எதிர்பார்க்கிறோம் - என்று கூறினார்.

0 Responses to சரணடைந்த புலிகளின் தலைவர்களுக்கு நடந்தது என்ன?: ரணில்